கம்பராமாயணம் 6700 · யுத்த 6.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுருதி மூர்த்தி - மறைகளின் வடிவாய்த் திகழ்பவனே!; ஆழிநீ அனலும் நீயே - இந்தக் கடலும் நீதான்; கடலை எரித்த தீயும் நீயே; அல்லவை எல்லாம் நீயே - இவையிரண்டுமல்லாத வானும், மண்ணும், விசும்பும் ஆகிய அனைத்தும் நீயே; ஊழிநீ உலகும் நீயே - உலகத்தை அழிக்கின்ற கடையூழிக் காலமும் நீயே உன்னால் அழிக்கப்படும் உலகமும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே - அவ்வுலகத்துள் வாழும் எல்லா உயிரினங்களும் நீயே; வாழியாய் அடியேன் நின்னை மறப்பனோ - என்றும் வாழ்கின்ற பெருமானே அடியவனாகிய நான் உன்னை மறப்பேனோ?; வயங்கு செந்தீச் சூழுற - விளங்குகின்ற செந்நிறத் தீ என்னைச் சூழ்ந்து கொள்ள; உலைந்து போனேன் - (அதனால் நான்) அழிந்தே போனேன்; காத்து அருள் - அடியேனைக் காத்து அடைக்கலம் தந்தருள்வாயாக.
சுருதி - வேதம். 'திடவிசும் பெரி வளி நீர்நிலம் இவை மிகை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும், உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்' என்ற திருவாய் மொழி நினைவு கூரத்தக்கது. கடலும் நீ. அக்கடலை அழித்த தீயும் நீ. கடையூழிக் காலமும் நீ. அக்காலத்து அழியும் உலகும் நீ அவ்வுலகத்தில் வாழும் உயிர்களும் நீ என்று வருணன் கூறியது பரமனது எல்லாமாயிருக்கும் தன்மையை உணர்த்தும், பரம் பொருள் என்றும் ஒரே தன்மையாய் நிலைத்து நிற்பது என்பதால் 'வாழியாய்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You are the sea; you are the fire too; all things besides, you are;
- you are the end of the age; you are the world too; the lives that dwell in them, you are;
- O you who live forever! Could I, your servant, forget you? With the bright red fire
- closing round me, I am undone; protect me, O embodiment of the Vedas.'
What the poem says
Varuṇaṉ praises Rāmaṉ as the Supreme Being who is everything: the sea and the fire that burns it, all other things, the age of destruction and the world it destroys, and every life within it. How could he ever forget such a Lord? Surrounded by fire, he is ruined and begs for protection. The commentary sets the verse beside a song of Nammāḻvār's Tiruvāymoḻi on God pervading all things.