கம்பராமாயணம் 6701 · யுத்த 6.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காட்டுவாய் உலகம் - உலகங்களை யெல்லாம் படைப்பாய், காட்டிக் காத்து - படைத்ததோடு அவற்றைக் காக்கவும் செய்வாய்; அவை கடையில் செந்தீ ஊட்டுவாய் - அவைகளை ஊழிக்காலத்து முடிவில் ஊழிக் காலப்பெருந்தீயூட்டி அழிப்பாய்; உண்பாய் நீயே - உலகனைத்தையும் உண்டு வயிற்றிலே வைத்துக் காப்பவனும் நீயே; உனக்கும் ஒண்ணாததுண்டோ - எல்லாம் வல்ல உனக்குச் செய்ய இயலாத செயலும் உண்டோ? தீட்டுவான் பகழி ஒன்றால் - தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட சிறந்ததொரு அம்பினாலேயே; உலகங்கள் எவையும் தீய வீட்டுவாய் - எல்லா உலகங்களும் தீய்ந்து போகும்படி அழிப்பாய்; நினையின் நாயேற்கு - நினைத்துப் பார்த்தால், நாய் போன்ற உனது அடியவனான எனக்கு; இத்தனை வேண்டுமோதான் - இத்தனை சினம் வேண்டுமோ?
காட்டுதல் - படைத்தல். பிரமனாகப் படைப்பவனும், திருமாலாகக் காப்பவனும் சிவனாக அழிப்பவனும் ஒருவனே என்பதை 'காட்டி, காத்து, செந்தீ ஊட்டுவாய்' என்றது உணர்த்தும். செந்தீ ஊட்டிப் பின் உலகங்கள் அழியாதபடி, உண்டு பின் வயிற்றில் வைத்துக் காப்பவனும் இறைவனே என்பதனை 'செந்தீ ஊட்டுவாய் உண்பாய் நீயே' என்பதுணர்த்தும். ஒரு அம்பால் உலகனைத்தையும் தீய்த்து அழிக்கவல்ல நீ எனக்காக இத்தனை சினம் கொள்ள வேண்டுமோ என்பான் 'நாயேற்கு இத்தனை வேண்டுமோ' என்றான். வான் பகழி - சிறந்த அம்பு. வீட்டுதல் - அழித்தல். மிகவும் எளிய அடியவன் நான் என்பதை 'நாயேன்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You bring forth the worlds; having brought them forth, you guard them, and at the end
- you feed them to the red fire; you yourself swallow them; is anything beyond you?
- With a single fine, sharpened arrow you could destroy all the worlds
- so that they burned, if you wished; was all this needed for a cur like me?'
What the poem says
Varuṇaṉ says that Rāmaṉ is at once creator, preserver and destroyer, the roles of Piramaṉ, Tirumāl and Civaṉ, and that at the end he takes the worlds into himself to keep them safe. Nothing is impossible for him; one arrow could burn up every world. So why spend such fury on Varuṇaṉ, whom he calls himself a lowly dog of a servant?