கம்பராமாயணம் 6702 · யுத்த 6.70

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின் வாழ்வே!
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ளப் பள்ளப்
புண்டரீகத்து வைகும் புராதன! போற்றி, போற்றி!

பொருள் · Meaning in Tamil

சண்ட வான் கிரண வாளால் - கொடிய, சிறந்த கிரணங்களாகிய வாளால்; தயங்கு இருள் காட்டைச் சாய்க்கும் - விளங்குகின்ற இருளாகிய காட்டை வெட்டிச் சாய்க்கின்ற; மண்டலத்து உறையும் சோதி வள்ளலே - சூரிய மண்டலத்தின் மத்தியிலே தங்கியிருக்கும் ஒளி வடிவான வள்ளலே; மறையின் வாழ்வே - வேதங்களின் வாழ்வாக விளங்குபவனே; பண்டை நான்முகனே ஆதி - பழமையான பிரமன் முதலாகிய; சராசரத்து உள்ளப் பள்ளப் புண்டரீகத்து வைகும் - நிற்பதனவும், இயங்குவனவுமான உயிர்களின் உள்ளமாகிய தாமரையிலே வசிக்கும்; புராதனா போற்றி போற்றி - பழமைமிக்கவனே போற்றி போற்றி.

சண்டம் - கொடுமை. ஈண்டு வெப்பக் கொடுமையே உணர்த்தும். கிரணத்தை வாளாகவும், இருளைக் காடாகவும் கூறியது உருவகம். சூரிய மண்டலத்தின் மத்தியிலே இறைவன் உறைகிறான் என்பது புராணக் கொள்கை. மண்டலம் - பரிதிமண்டலம் உயிரினங்களின் உள்ளத்தாமரையில் உறைபவன் பரமன் ஆதலின் "சராசரத்து உள்ளப் பள்ளப்புண்டரீகத்து வைகும்" என்றான். உள்ளப் பள்ளம் - உள்ளமாகிய பள்ளம் என்றது உருவகம். புராதனன் - பழமையானவன். உள்ளப் பள்ளம் - உள்ளமாகிய பள்ளம் என்பதால் உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'O bountiful Light who dwells in the orb that fells the shimmering forest of darkness
  2. with the sword of its fierce, bright rays! O life of the Vedas!
  3. O Ancient One, who dwells in the lotus of the heart-pool
  4. of all things moving and unmoving, from the ancient Four-Faced One on! Praise to you, praise!'

What the poem says

Varuṇaṉ's hymn continues. Rāmaṉ is the Light that lives at the centre of the sun's orb, whose ray-swords cut down the forest of darkness; he is the life of the Vedas; and he is the Ancient One who dwells in the lotus of the heart of every being, moving and unmoving, from Piramaṉ downwards. The images of the sword of rays, the forest of darkness and the heart as a lotus pool are metaphors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṇṭa vāṉ kiraṇa vāḷāl tayaṅku iruṭ kāṭu cāykkum
maṇṭalattu uṟaiyum cōti vaḷḷalē! maṟaiyiṉ vāḻvē!
paṇṭai nāṉmukaṉē āti carācarattu uḷḷap paḷḷap
puṇṭarīkattu vaikum purātaṉā! pōṟṟi, pōṟṟi!