கம்பராமாயணம் 6703 · யுத்த 6.71

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் - ஒருவரும் உணராதவாறு உலகத்தை எல்லாம் உதரத்தில் வைத்துக் காத்தருளிய கருணை மிக்கவனே; மறையில் கூறும் - வேதங்களில் விரித்துக் கூறப்படுகின்ற; எள்ளல் ஆகாத மூலத்து - எங்கும் இகழ்ந்து பேசமுடியாத மூலப்பகுதியிலிருந்து தோன்றிய; யாதுக்கும் முதலாயுள்ள வள்ளலே - எல்லா உயிர்களுக்கும் முதலாக உள்ள வள்ளலே; காத்தி என்ற மாகரி வருத்தம் தீர - என்னைக் காத்தருள்வாயாக என்று முறையிட்ட பெருமை மிக்க யானையின் துன்பம் தீர; புள்ளின் மேல் வந்து தோன்றும் - பறவையரசனான கருடன் மீதமர்ந்து வந்து தோன்றிய, புராதனா போற்றி போற்றி - பழமையோனே போற்றி போற்றி!

கள்ளமாய் - ஒருவரும் உணராதவாறு மூலத்து - மூலப்பகுதியிலிருந்து மாகரி - பெருமையுடைய யானை (கஜேந்திரன்) புள் - பறவை, ஈண்டுக்கருடன். வருத்தம் - முதலையால் பட்ட துன்பம். எவரும் உணரமுடியாதவாறு உலகத்துயிர்களை எல்லாம் காத்தருளும் கருணை உடையவன் இறைவன் என்பதை 'கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்' என்பதுணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'O Compassionate One who takes the world in secretly! O Bountiful One
  2. who is the first of all things, from the root the Vedas speak of,
  3. that none can scorn! O Ancient One, who appeared upon the bird
  4. to end the great elephant's anguish when it cried "Save me!" Praise to you, praise!'

What the poem says

Varuṇaṉ recalls Tirumāl's mercy. He silently takes the whole world into himself to protect it; he is the source of all things, arising from the primal root the Vedas describe. Above all, he is the one who came flying on Garuḍa, the king of birds, to rescue the great elephant Gajēndra when a crocodile seized it and it cried out to him for help. Varuṇaṉ hopes for the same mercy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kaḷḷamāy ulakam koḷḷum karuṇaiyāy! maṟaiyil kūṟum
eḷḷal ākāta mūlattu yātukkum mutalāy uḷḷa
vaḷḷalē! kātti'' eṉṟa mā kari varuttam tīra,
puḷḷiṉmēl vantu tōṉṟum purātaṉā! pōṟṟi, pōṟṟi!