கம்பராமாயணம் 6713 · யுத்த 6.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாபமே இயற்றினாரை - பாவம் மிக்க செயல்களையே புரிந்து வந்த அரக்கர்களை; பல நெடும்காதம் ஓடி - பலகாதங்களாகிய நெடும் தூரம் விரைந்து சென்று; தூபமே பெருகும் வண்ணம் - மருகாந்தாரத் தீவு முழுதும் புகை சூழும்படி, எரி எழச் சுட்டது - நெருப்பு எழும்படி சுட்டு அழித்தது; தீபமே அனைய ஞான - புற இருளை மாற்றும் விளக்குப் போன்று, அக இருளை மாற்றவல்ல தீபமாகிய ஞானம் மிக்க; திருமறை முனிவர் செப்பும் - தெய்வத்தன்மை வாய்ந்த வேதங்களை அறிந்த முனிவர்கள் கூறுகின்ற; சாபமே ஒத்தது அம்பு - சாப மொழியை ஒத்தது இராமபாணம்; தருமமே வலியது அம்மா - தருமம் எத்தனை வலிவுடையது.
'நிறை மொழிமாந்தர் பெருமை நிலத்து மறை மொழிகாட்டி விடும்' என்பது குறள் கூறும் உண்மை. அன்றே என்பது அசை அம்மா - வியப்பிடைச் சொல். அதர்மத்தை விரைந்தழிக்கவல்ல தர்மமே வலிமை மிக்கது என்பார் 'தருமமே வலியது' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who did nothing but sin it reached, running many long leagues,
- and burned them so that the fire rose and the smoke swelled;
- the arrow was like the curse spoken by sages of the sacred Veda,
- whose wisdom is like a lamp: how mighty dharma is!
What the poem says
The arrow travels many leagues to the island and burns the sinful demons until smoke covers it. It strikes like the curse of a Vedic sage whose wisdom is a lamp against inner darkness: such a curse never fails. The verse ends in wonder: how strong dharma is! The commentary cites the Tirukkuṟaḷ couplet that the power of the great is shown by their words.