கம்பராமாயணம் 6714 · யுத்த 6.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வள்ளல் வருணனை நோக்கி - வேண்டுவார் வேண்டியதருளும் வள்ளலாகிய இராமபிரான் வருணனைப் பார்த்து; மொழி உனக்கு அபயம் என்றாய் - 'உனக்கு அடைக்கலம்' என்று ஒரு சொல் நீ சொன்னாய்; ஆதலால் முனிவு தீர்ந்தேன் - அதனாலே உன் மீது கொண்டிருந்த சினம் தீர்ந்தேன்; பழி எனக்கு ஆகும் என்று - இராமன் தனது மனைவியைக் கூடக் காப்பாற்றும் வலிமை இல்லாதவன் என்று உலக மக்கள் கூறும் பழிக்கு நான் ஆளாகட்டும் என்று; பாதகர் பரவை என்னும் குழியினைக் கருதி - பாதகர்களாகிய அரக்கர்கள் இலங்கைக்கு அரணாகக் கடல் என்ற குழி இருப்பதைக் கருதி; செய்த குமண்டையைக் குறித்து - செய்த கூத்தினைக் குறித்து; நீங்க வழியினைத் தருதி என்றான் - அது நீங்க, இலங்கை செல்லுதற்குரிய வழியைத் தருவாயாக என்றான்.
பாதகர் - இராவணன் முதலானோர் பாதகர் 'பரவை (கடல்) நமக்குப் பாதுகாப்பான 'நீரரண்' என்று நினைக்கலாம்; அது நமக்குத் தாண்ட முடிந்த ஒரு சிறிய 'குழி'தான் என்பது இராமபிரான் கருத்து. குமண்டை - மகிழ்ச்சிச் செருக்கால் செய்யும் ஒருவகைக் கூத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You said the word, "I take refuge in you"; therefore my anger has ended.
- Thinking, "The blame will fall on him", the evildoers, relying on the pit
- called the sea, have danced in their glee; so that this may end,
- give me a way,' said the Bountiful One, looking at Varuṇaṉ.
What the poem says
Rāmaṉ tells Varuṇaṉ that his single word of surrender has ended his anger. Now he returns to his real need. Irāvaṇaṉ and his demons, trusting in the ocean as a moat around Ilaṅkai, have been dancing in triumph, sure that Rāmaṉ will be shamed as a man who could not rescue his own wife. To Rāmaṉ the mighty sea is a mere 'pit'. He asks Varuṇaṉ for a way across so their gloating may end.