கம்பராமாயணம் 6715 · யுத்த 6.83

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தவத்தின் மிக்கோய் - மிகுந்த தவம் பொருந்திய பெருமானே; ஆழமும் அகலம் தானும் அளப்பரிது எனக்கும் ஐய - ஐயனே! இந்தக் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அளந்தறிவதென்பது கடல் வேந்தனான எனக்கும் அரிய தொன்றாகும்; ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை - 'ஏழுலகங்கள்' என அடுக்காக உள்ள உலகுக்கும் கடலில்லையேல் எல்லையில்லை; வாழியாய் வற்றி நீங்கில் - வாழ்வுக்குரிய இறைவனே, இந்தக் கடலை வற்றச் செய்து, நீர் முழுவதையும் நீங்கச் செய்ய; வரம்பறு கால மெல்லாம் தாழும் - அளவில்லாத காலம் தாமதமாகும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும் - உனது வானர சேனை, காலம் நீட்டிப்பதால் மனம்தளர்ந்து போகநேரிடும் (என்றான்.

'வழியினைத் தருதி' என்று கேட்ட ராமபிரானுக்கு வருணன் கூறிய மறுமொழி இது. இந்தக் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அளந்தறியக் கடல் தெய்வமாகிய என்னாலும் இயலாது என்பான் 'எனக்கும் அளப்பரிது' என்றான். கடல் நீர் வற்றி நீங்குமானால் உலகுக்கு எல்லை இல்லாது போகும் என்பான் 'வற்றி நீங்கில் உலகுக்கு எல்லை இல்லை' என்றான். நீர்வற்றி நீங்கினால் உலகுக்கு எல்லை இல்லாது போகும் என்பதைத் தவிர, அப்படி வற்றச் செய்ய அளவற்ற காலம் கடந்து போகும் என்பான் 'வரம்பறு காலமெல்லாம் தாழும்' என்றான். அதனால் நின் வானர சேனை உள்ளம் சோர்ந்து போய் விடும் என்பான் 'நின் சேனை உள்ளம் தளர்வுறும்' என்றான். கடலில் வழி உண்டாக்க, கடல் நீரை வற்றச் செய்வது ஒரு வழி. அதனை இராமபிரான் எண்ணியிருக்கக் கூடும் என்று கருதி, அவ்வாறு செய்தால் நேரும் விளைவுகளை வருணன் விவரிப்பானாயினான். உலகுக்கு எல்லையில்லாது போகும் கடல்நீரை வற்றச் செய்யக் காலம் தாழ்க்கும் என்று கூறி இது ஏற்புடைய தல்ல என விலக்கி, வேறு வழி கூறலானான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Its depth and breadth are hard to measure even for me, my Lord;
  2. and the worlds that stand stacked as seven would have no boundary;
  3. O you who live forever! If it were dried up and removed, endless ages
  4. would go by, and your army's spirit would flag, O you supreme in austerity.'

What the poem says

Varuṇaṉ explains why simply drying up the sea will not do. Even he, the sea's own lord, cannot measure its depth and breadth. Without the ocean the stacked worlds would lose their boundary. And emptying it would take endless time, while the monkey army waited and lost heart. Having ruled out this course, he goes on to suggest another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻamum akalamtāṉum aḷappa aritu eṉakkum aiya!
ēḻ eṉa aṭukki niṉṟa ulakukkum ellai illai;
vāḻiyāy! vaṟṟi nīṅkil, varampu aṟu kālam ellām
tāḻum; niṉ cēṉai uḷḷam taḷarvuṟum tavattiṉ mikkōy.