கம்பராமாயணம் 6716 · யுத்த 6.84

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கல் என வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லையில் காலம் எல்லாம் ஏந்துவென், எளிதின்; எந்தாய்!
செல்லுதி,"சேது" என்று ஒன்று இயற்றி, என் சிரத்தின் என்றான்.'

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - என் தந்தையே; கல் என வலித்து நிற்பின் - கடல் நீரைக் கல்லைப் போலக் கடினமாக்கி நின்றால்; கணக்கிலா உயிர்கள் எல்லாம் ஒல்லையில் உலந்து வீயும் - கடலில் வாழும் கணக்கில்லாத உயிரினங்களெல்லாம் வாழ முடியாதபடி விரைவில் இறந்து படும்; இட்டது ஒன்று ஒழுகா வண்ணம் - என்னிடம் இட்டது எதுவும் கீழே ஒழுகிவிடாதபடி; எல்லையில் காலமெல்லாம் ஏந்துவன் - அளவில்லாத காலமெல்லாம் தாங்கி ஏந்திக் கொண்டிருப்பேன் என் சிரத்தின் மேலாய் - எனது தலையின் மீதாக; சேது என்று ஒன்று இயற்றி - அணை என்ற ஒன்றை இயற்றி; இனிதின் செல்லுதி - அதன் வழியாக இனிதே செல்லுவாயாக (என்றான்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If I were to harden and stand firm like stone, the countless creatures
  2. would quickly perish and die. So that nothing placed on me sinks away,
  3. I shall bear it gladly for all time without end; my father!
  4. Build a thing called a bridge, and go across it, over my head.'

What the poem says

Varuṇaṉ rejects a second option: he could make his waters solid as stone for the army to walk on, but that would kill the countless creatures living in the sea. Instead he proposes a causeway, a cētu. Whatever is laid on him, he promises, he will hold up on his head forever without letting it sink, and Rāmaṉ and his army may cross over it in comfort. This sets up the building of the bridge to Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kalleṉa valittu niṟpiṉ, kaṇakku ilā uyirkaḷ ellām
ollaiyiṉ ulantu vīyum; iṭṭatu oṉṟu oḻukāvaṇṇam
ellai il kālam ellām ēntuveṉ, iṉitiṉ; entāy!
celluti, "cētu" eṉṟu oṉṟu iyaṟṟi, eṉ cirattiṉ mēlām.'