கம்பராமாயணம் 6717 · யுத்த 6.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நன்று இது புரிதும் - நல்லது இதைச் செய்வோம் என்று கூறிய இராமபிரான்; நம்மால் நளிர்கடல் பெருமை - கடல்மீது அணைகட்டுவோமானால், நம்மால் இந்தக் குளிர்ந்த கடலுக்குள்ள பெருமை; இன்று இது தீரும் என்னில் - நாம் அணைகட்டிக் கடந்து செல்வதால் தீருமாயின்; பூதமெல்லாம் எளிவரும் - மற்ற நான்கு பூதங்களும் நமக்கு எளிமைப்படும்; குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் - குன்றுகளைக் கொண்டு வந்து அடுக்கிக் கடலின்மீது அணைகட்டுங்கள்; என்று கூறிச் சென்றனன் இருக்கை - என்று வானர வீரர்களுக்குப் பணித்து விட்டுத் தனது இருப்பிடம் செல்லலானான்; வருணனும் அருளின் சென்றான் - வருணனும் இராமபிரானது அருளுக்கு உரியவனாக (விடைபெற்றுச்) சென்றான்.
நளிர்கடல் - குளிர்ந்த கடல். கடலுக்குரிய பெருமை 'ஆழமும் அகலம் தானும் அளம் பரிது' நாம் அணை கட்டுவதால் அந்தப் பெருமை நீங்கும் என்பான் 'இன்று இது தீரும்' என்றான். தீரவே மற்றைய பூதங்களான நிலம், தீ, காற்று, விசும்பு ஆகியவையும் பெருமை குறைந்து நமக்கு எளிமைப்படும் என்பான் 'எளி வரும் பூத மெல்லாம்' என்றான். கடல் நீரை வற்றச் செய்வதோ, கல்லைப் போல் இறுகும்படி செய்வதோ தவிர்ந்து மலைகளைக் கொண்டு வந்து அடுக்கி அணை கட்டுங்கள் என்பான் 'குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர்' என்றான். குயிற்றுதல் - கட்டுதல். 'அன்றே' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Good, this we shall do; if through us the greatness of the cool sea
- is ended today, all the elements will become easy for us;
- bring hills, stack them up and build a causeway,' he said, and
- went toward his dwelling; and Varuṇaṉ too departed, blessed by his grace.
What the poem says
This verse closes the episode in which Varuṇaṉ, lord of the ocean, appeared before Irāmaṉ and advised him to cross by building a causeway. Irāmaṉ agrees and orders the monkey warriors to bring hills and pile them up into a bridge.
The sea's pride lies in its depth and breadth, too vast to measure. If a bridge humbles it today, Irāmaṉ reasons, the other elements, earth, fire, wind and sky, will also lose their pride and yield to him. He chooses neither to dry up the waters nor to harden them like stone, but to build. Varuṇaṉ then takes his leave, having received Irāmaṉ's favour.