கம்பராமாயணம் 6718 · யுத்த 7.1

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவிக்கு நாயகன் - வானரசேனையின் அரசனான சுக்கிரீவன்; அரக்கர் கோமகற்கு இளவலும் இனிது உடன் இருக்க - அரக்கவேந்தனான இராவணனுக்குத் தம்பியான வீடணனும் இனிதே உடனிருக்க; அளவறும் அறிஞரோடு எண்ணினான் - அளவற்ற அறிஞர்களான சாம்பன், அனுமன், அங்கதன் ஆகியவர்களுடன் கலந்து ஆலோசித்தான் பின்னர்; விளைவன விதிமுறை முடிக்க வேண்டுவான் - இனி நிகழ வேண்டியவற்றை முறைப்படி நிறைவேற்ற வேண்டி; நளன் வருக என்றனன் - அதற்கேற்றவன் நளனே என முடிவு செய்து நளனை வருமாறு பணித்தான்.

கவிக்கு நாயகன் - சுக்கிரீவன். இதே தொடர் முன்னர் ஊர்தேடு படலத்தில் (4966) அனுமனைக் குறிக்கவந்தது. அங்கே அனுமனுக்குத் தலைமை (நாயகன்) பாகவதத்திறத்தாலும் கைங்கரியத் திறத்தாலும்; இங்கே சுக்கிரீவனுக்குத் தலைமை (மகாராஜா என வைணவ சம்பிரதாயம் குறிக்கும்) ஆட்சி பீடத்தால். சேது கட்டுதலை நிறைவேற்றுதற்கு உரியவன் நளனே என்பதால் 'நளன் வருக' என்றனன். நளன் தெய்வதச்சன் விசுவகர்மாவின் மகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With wise counsellors beyond measure, and with the younger brother
  2. of the lord of the Arakkars gladly sitting beside him, he deliberated;
  3. wishing to carry through in due order all that must now follow,
  4. the lord of the monkeys said, 'Let Naḷaṉ come!'

What the poem says

The Bridge-Building chapter opens. Cukkirīvaṉ, king of the monkey host, takes counsel with his wise elders, Cāmpaṉ, Aṉumaṉ and Aṅkataṉ, with Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's younger brother, seated beside him. Deciding that only one among them is fit for the task, he summons Naḷaṉ.

Naḷaṉ is the son of Vicuvakarmā, the divine architect, and is the monkey army's master builder. The title 'lord of the monkeys', used earlier for Aṉumaṉ in a devotional sense, here marks Cukkirīvaṉ's royal authority.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aḷavu arum aṟiñarōṭu arakkar kōmakaṟku
iḷavalum iṉitu uṭaṉ irukka eṇṇiṉāṉ
viḷaivaṉa viti muṟai muṭikka vēṇṭuvāṉ
'naḷaṉ varuka!' eṉṟaṉaṉ kavikku nāyakaṉ.