கம்பராமாயணம் 6720 · யுத்த 7.3

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூரியன் காதல - சூரிய குமாரனே; காரியம் கடலினை அடைத்துக் கட்டலே- நான் செய்ய வேண்டிய காரியம் இந்தக் கடலை அடைத்து அணை கட்டுவதுதானே; சொல்லி என் பல - பலவும் கூறி என்ன பயன்?; மேருவும் அணுவும் ஓர் வேறுறாவகை - மிகப் பெரிய மேருமலையும் மிகச் சிறிய அணுவும் வேறாகத் தோன்றாதபடி; ஏர்வுற இயற்றுவென் - அழகு பொருந்த அணையைக் கட்டுவேன்; கொணர்தி என்றனன் - அணை கட்டுதற்கு உரியனவான மலை முதலியவைகளைக் கொண்டு வரச் செய் என்றான்.

அணைகட்டுவதை எளிமையான தொரு செயல் என்று தோன்றும்படி 'காரியம் கடலினை அடைத்துக்கட்டலே' என்றான். 'இவ்வளவுதானே செய்து முடிப்பேன்' என்பது குறிப்பு. மேரு மலை மிகப் பெரியது அணு மிகச் சிறியது என்றாலும் இரண்டையும் சேர்த்து ஒன்று போலத் தோன்றும் படி இயற்றுதல் போல அழகு பொருந்த அணையைக் கட்டுவேன் என்பான் 'மேருவும் அணுவுமோர் வேறுறா வகை ஏர்வுற இயற்றுவன்' என்றான். ஏர்- அழகு. வேறு உறாவகை - வேறாகத் தோன்றாதபடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The task is only to block the sea and bind it, is it not?
  2. Son of the Sun, why say so much?
  3. So that Mount Mēru and an atom show no difference,
  4. I will build it beautifully; have the materials brought,' he said.

What the poem says

Naḷaṉ answers Cukkirīvaṉ, son of the Sun god, with easy confidence: blocking the sea is a small thing, and there is no need for long talk.

His boast is that he will fit together the greatest and the smallest, a mountain as huge as Mēru and a speck like an atom, so evenly that no difference shows, and the whole work will be beautiful. He asks only that the hills and other materials be brought to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāriyam kaṭaliṉai aṭaittuk kaṭṭalē;
cūriyaṉ kātala! colli eṉ pala;
mēruvum aṇuvum ōr vēṟu uṟāvakai
ērvuṟa iyaṟṟuveṉ; koṇarti; eṉṟaṉaṉ