கம்பராமாயணம் 6722 · யுத்த 7.5

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருவரை காதங்கள் கணக்கு இலாதன - கணக்கில்லாத பல காத தூரம் பரவியுள்ள கரிய மலைகளையெல்லாம்; இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின - இரண்டு கைகளிலும், இரண்டு தோள்களிலும், தலையிலும் ஏந்தியனவாக; ஒரு கடல் அடைக்க - ஒரு கடலை அடைத்து அணை கட்டுவதற்காக; மற்று ஒழிந்த வேலைகள் வருவனவாம் என- மற்றுள்ள ஆறு கடல்களும் வருவனபோல்; வானரம் வந்த - வானரப் படைகள் வந்தன.

கருவரை - கருமை நிறமான மலைகள். 'ஏந்தின வந்த' என இயையும். வந்த - வந்தன. வருவனவாம் என - வருவன போல. மற்று - அசை. ஏந்தின- முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Black mountains stretching countless leagues
  2. they bore in both hands, on their shoulders, on their heads;
  3. as if, to dam the one sea, all the other oceans
  4. were coming, so the monkeys came.

What the poem says

The monkeys answer the call carrying dark mountains, each spanning many leagues, in their hands, on their shoulders and on their heads.

The poet's image: the dark masses moving toward the shore looked as if the other six oceans of the world had risen and were marching in to help fill up this one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karu varai kātaṅkaḷ kaṇakku ilātaṉa
iru kaiyil tōḷkaḷil ceṉṉi ēntiṉa
oru kaṭal aṭaikka maṟṟu oḻinta vēlaikaḷ
varuvaṉa ām eṉa vanta vāṉaram.