கம்பராமாயணம் 6724 · யுத்த 7.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காலிடை ஒரு மலை உருட்டி - சில வானரங்கள் கால்களால் ஒரு மலையை உருட்டிக் கொண்டும்; கைகளின் மேலிடை மலையினை வாங்கி - தங்களது கைகளின் இடையிலே ஒரு மலையைத் தாங்கியும்; விண் தொடும் - வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதும்; சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய - கருக் கொண்ட மேகங்கள் சூழ்ந்து சுற்றிக் கொண்டிருப்பதுமான; ஒரு மலை வாலிடை ஈர்த்து - ஒரு பெரிய மலையை வாலால் கட்டி இழுத்துக் கொண்டும்; வந்த - வந்தன.
ஆல் - அசை. வலிமை மிக்க வானரங்களாதலால், காலால் ஒரு மலையை உருட்டிக் கொண்டும் கைகளால் ஒரு மலையைச் சுமந்து கொண்டும், வாலால் ஒரு மலையைக் கட்டி இழுத்துக் கொண்டும் வந்தன. மலையின் உயரச் சிறப்புத்தோன்ற 'சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய மலை' என்றார். ஒவ்வொரு குரங்கும் ஒரே சமயத்தில் மூன்று மலைகளைக் கொண்டு வந்ததென்பது கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rolling one mountain along with their feet, taking
- another mountain up in their arms, and, sky-touching,
- wrapped all round by pregnant rain clouds,
- one more mountain dragged by the tail, they came.
What the poem says
Each mighty monkey brings three mountains at once: one rolled along with the feet, one carried in the arms, and one tied to its tail and dragged behind.
The mountain hauled by the tail is so tall that it touches the sky, and heavy rain clouds cling around its peak, which shows its height.