கம்பராமாயணம் 6725 · யுத்த 7.8

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முடுக்கினன்'தருக'என மூன்று கோடியர்
எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு
அடுக்கினன்; தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான்.

பொருள் · Meaning in Tamil

நளன் எனும் நவையின் நீங்கினான் - நளன் என்னும் பெயருடைய குற்றமற்றவனாகிய வானரத்தச்சன்; முடுக்கினன் 'தருக' என- 'மலைகளைத் தருக!' என்று கூறி வானரங்களை விரட்டினான்; மூன்று கோடியர் எடுக்கினும் - மூன்று கோடி வானரங்கள் மலைகளை எடுத்துக் கொடுத்தாலும்; அம்மலை ஒருகை ஏந்தியிட்டு அடுக்கினன் - அந்த மலைகளை எல்லாம் தனது ஒருகையினால் வாங்கி, அடுக்கினான்; தன் வலி காட்டி - தனது வலிமைகாட்டி; ஆழியை நடுக்கினன் - அக்கடலை நடுங்கும்படி செய்தான்.

மூன்று கோடி வானரங்கள் மலைகளை எடுத்து வந்து கொடுத்தாலும், அம் மலைகளைத் தனது ஒரு கையால் ஏந்தி அடுக்கிவிட்டு, 'மலைகளைக் கொடுங்கள்' என்று வானரங்களை விரட்டினான். தனது வல்லமையைக் காட்டி, அக்கடலையே நடுங்கும் படி செய்தான். நளனது ஒப்பற்ற ஆற்றலைக் கூறுவதிது. அவனது சிறப்புத் தோன்ற 'நளன் எனும் நவையின் நீங்கினான்' என்றார். நவை - குற்றம். பெரிய மலைகளைக் கடலில் இடும் போது, தண்ணீர் பொங்கி அலைஎழுவது கடல் நடுங்குவது போலிருந்தது என்பதால் 'ஆழியை நடுக்கினன்' என்றார். முடுக்குதல் - விரட்டுதல். கோடிக் கணக்கான வானரங்கள் கொணர்ந்து கொட்டிய மலைகளை நளன் ஒருவனே தச்சனாக அமைந்து விரைவாகக் கட்டியதோடன்றி, மேன்மேலும் கல் கொணர்க என வானரங்களை விரட்டினான் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He drove them on, crying 'Bring more!'; though three crores of them
  2. lifted mountains for him, he took each in one hand
  3. and stacked it; showing his strength he made the ocean
  4. tremble, Naḷaṉ, the one free of every flaw.

What the poem says

Naḷaṉ alone does the building. Thirty million monkeys bring him mountains, and he catches each one in a single hand, sets it in place and shouts for more, driving the carriers to go faster.

As the huge rocks drop into the water, the sea heaves and surges in waves, so it seems to tremble before his strength. 'Free of every flaw' praises his craft as beyond reproach.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭukkiṉaṉ 'taruka' eṉa mūṉṟu kōṭiyar
eṭukkiṉum am malai oru kai ēntiyiṭṭu
aṭukkiṉaṉ; taṉ vali kāṭṭi āḻiyai
naṭukkiṉaṉ naḷaṉ eṉum navaiyiṉ nīṅkiṉāṉ.