கம்பராமாயணம் 6726 · யுத்த 7.9

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மஞ்சினில் திகழ்தரு மலையை மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
'தஞ்சம்!'என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.

பொருள் · Meaning in Tamil

மஞ்சினில் திகழ் தரும் மலையை - மேக மண்டலம் வரை உயர்ந்து திகழும் மலைகளை; மாக்குரங்கு எஞ்சுறக் கடிதெடுத்து எறியவே - பெரிய குரங்குகள் விரைந்து எடுத்து வந்து எறிய; (அவைகளை) நளன் விஞ்சையில் தாங்கினன் - நளன் தான் கற்ற விஞ்சையினாலே தான் ஒருவனே தாங்கினான்; சடையன் வெண்ணையில் - திரு வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல்; தஞ்சம் என்றோர்களை - அடைக்கலம் என்று தன்னை நாடி வந்தவர்களை; தாங்கும் தன்மை போல் - தாங்கி ஆதரிக்கும் தன்மையைப் போல (நளன் மலைகளைத் தாங்கினான்).

'சடையன் வெண்ணையில் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல் நளன் விஞ்சையில் தாங்கினன்' என இயையும். மஞ்சு- மேகம். மேகமண்டலத்துக்கு மேலே உயர்ந்து திகழும் மலையாதலின் 'மஞ்சினில் திகழ்தரும் மலை' என்றார். விஞ்சை- வித்தை, தான் கற்றிருந்த அற்புத வித்தை வன்மையால் நளன் மலைகளைத் தாங்கினான் என்பதால் 'விஞ்சையில் தாங்கினன்' என்றார். கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை இங்குக் கூறியது செய்ந்நன்றி மறவாத பண்பால் என்க. சடையப்ப வள்ளலின் கொடைத்திறம். தஞ்சமென வந்தவரை ஆதரித்தல் இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. நளன்பற்றிக் கூறிய உயர்வு நவிற்சிக்குச் சடையப்பர் வள்ளன்மை உவமையாயிற்று. உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கண வழி; அவ் வழியை மனங் கொண்டு சடையப்பரின் பெருமையை உய்த்துணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great monkeys swiftly lifted and hurled, without pause,
  2. mountains that shone up among the clouds, Naḷaṉ
  3. caught them by his art, just as Caṭaiyaṉ of Veṇṇai
  4. upholds all those who come to him crying 'Refuge!'

What the poem says

The monkeys fling cloud-high mountains at Naḷaṉ, and by his marvellous skill he catches and bears them all by himself.

The simile is famous: he holds them up the way Caṭaiyaṉ of Tiruveṇṇeynallūr supports everyone who comes to him seeking refuge. Caṭaiyappa Vaḷḷal was the poet Kampaṉ's own patron, and naming him here is an act of gratitude. In Tamil poetics the thing compared to should be the greater, so the line quietly ranks the patron's generosity above even Naḷaṉ's feat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mañciṉil tikaḻtarum malaiyai māk kuraṅku
eñcuṟak kaṭitu eṭuttu eṟiyavē naḷaṉ
viñcaiyil tāṅkiṉaṉ caṭaiyaṉ veṇṇaiyil
'tañcam!' eṉṟōrkaḷait tāṅkum taṉmaipōl.