கம்பராமாயணம் 6727 · யுத்த 7.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சயக் கவிப் பெரும் படைத்தலைவர்- வெற்றி மிக்க வானரப் பெரும்படையின் தலைவர்கள்; தாள்களால் - தம் கால்களினாலே; முயல் கறை மதி தவழ்முன்றில் குன்றுகள் - முயல் போன்ற களங்கத்தை உடைய சந்திரன் தவழும்படியான மலைகளை; அயக்கலின் - அசைப்பதனால்; முகில் குலம் அலறி ஓடின - மேகக் கூட்டங்கள் அரற்றிக் கொண்டு ஓடின; இயக்கரும் மகளிரும் - அம்மலைகளில் இருந்த இயக்கர்களும் அவர்களது மனைவிமார்களும்; இரியல் போயினார் - மலைகளை விட்டு நீங்கிச் செல்வாராயினர்.
வெற்றிமிக்க வானரப் படையை 'சயக் கவிப் பெரும்படை' என்றார். வானரப் படைத் தலைவர்கள் வெற்றியைக் கவிகளாற் பாடிப் புலவர் சிறப்பித்தனர் என்பதாம். (சயக் கவி - வெற்றியைப் போற்றும் கவிதைகள்) மலைகளின் உயர்ச்சி தோன்ற 'மதி தவழ் குன்று' என்றார். அயக்கல் - அசைத்தல் (சகர-யகரப் போலி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the chiefs of the great victorious monkey army, with their feet,
- shook the hills across whose courtyards the hare-stained moon creeps,
- the clans of clouds fled crying out,
- and the Yakṣas and their women ran off in confusion.
What the poem says
The monkey captains loosen the mountains by pushing at them with their feet. These peaks are so tall that the moon, with the hare-shaped mark on its face, seems to crawl across their summits.
As the hills rock, the clouds resting on them flee as if crying out, and the Yakṣas, semi-divine beings who live on the mountains, run away with their wives.