கம்பராமாயணம் 6728 · யுத்த 7.11

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேருடை நெடுங்கிரி தலைவர் வீசின - வானரப் படையின் தலைவர்கள் பறித்துக் கடலில் எறிந்த அடியோடு பெயர்த்து வீசப்பட்ட மலைகளெல்லாம்; ஓரிடத்து ஒன்றின் மேல் ஒன்று - ஒரே இடத்தில் ஒன்றின்மீது மற்றொன்றாக; சென்று உக - சென்று வீழ்ந்ததால், நீரிடை நிமிர் பொறி பிறக்க - கடல் நீரின் மீது உயர்ந்த தீப்பொறி பிறந்ததால்; நீண்ட ஈது ஆருடை நெருப்பு என -கடல் மீது நீண்டெரியுமிந்த நெருப்பு யாருண்டாகச் செய்ததென்று; வருணன் அஞ்சினான்- கடலரசனான வருணன் மிகவும் பயந்தான்.

நிமிர் - நீண்ட. பொறி - தீப்பொறி. ஏற்கனவே இராமபிரானது அம்புகள் நெருப்பை உமிழ்ந்த துன்பத்தைத் துய்த்தவன் வருணன். இராமனை அடைக்கலம் அடைந்ததால் அவன் சினம் தணிந்து நின்றான். 'இப்போது நீரிடையே நெருப்புத் தோன்றுகிறதே இது வேறுயாருடைய செயலாகும்' என்பான் 'நீண்ட ஈது ஆருடை நெருப்பு' என்று கேட்டு, அஞ்சலாயினான். அடைக்கலம் தந்து ஆதரித்த இராமபிரானது நெருப்பாக இருக்க இயலாது என்பதால் 'ஈது ஆருடை நெருப்பு' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The tall mountains, roots and all, that the chiefs flung
  2. fell one upon another in a single place,
  3. and sparks shot up from the water; 'Whose fire is this,
  4. spreading so far?' cried Varuṇaṉ in fear.

What the poem says

Uprooted mountains crash down on top of each other in the same spot, and the collisions strike sparks that leap up out of the sea.

Varuṇaṉ, god of the ocean, has already suffered the fire of Irāmaṉ's arrows. Since he has taken refuge with Irāmaṉ and been pardoned, he knows this new fire cannot be Irāmaṉ's, and he cries out in fear, wondering whose it is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēruṭai neṭuṅ kiri talaivar vīciṉa
ōr iṭattu oṉṟiṉmēl oṉṟu ceṉṟuka
nīriṭai nimir poṟi piṟakka nīṇṭa ītu
āruṭai neruppu?' eṉa varuṇaṉ añciṉāṉ.