கம்பராமாயணம் 6729 · யுத்த 7.12

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆனிறக் கண்ணன் என்று ஒருவன் அங்கையால்
கான்நிற மலை கொணர்ந்து எறியக் கார்க்கடல்
தூநிற முத்தினம் துவலையோடும் போய்
வான்நிறை மீனொடு மாறு கொண்டவே

பொருள் · Meaning in Tamil

ஆனிறக் கண்ணன் என்று ஒருவன் - ஆனிறக் கண்ணன் (கவயாட்சன்) என்ற பெயர் கொண்ட ஒருவானரத் தலைவன்; அங்கையால் கான் இறமலை கொணர்ந்து எறிய - தனது உள்ளங்கையால் காடுகள் அழியுமாறு மலையைக் கொண்டு வந்து கடலில் எறிய; கார்க்கடல் தூநிற முத்து இனம் - கரிய கடலிலுள்ள தூய நிறத்தைஉடைய முத்துக்களெல்லாம்; துவலையோடு போய்- கடலில் மலை விழலால் எழுந்த நீர்த்திவலைகளோடு சென்று; வான் நிறை மீனொடு- வானத்திலே நிறைந்துள்ள விண்மீன்களோடு; மாறு கொண்டவே - மாறுபாடு கொண்டு தோன்றுவனவாயின.

'கவயாட்சன்' என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கமே ஆனிறக் கண்ணன். மலையின் மீதுள்ள காடுகளெல்லாம் மலையைப் பறித்தெடுக்க அழிதலால் 'கான் இற' என்றார். கடலில் மலை விழுதலால் எழுந்த நீர்த்திவலை (துளி)களோடு, முத்துக்களும் வானிலே சென்று பொருந்தின. விண்மீன்களும், முத்துக்களும், ஒன்றுடன் ஒன்று 'மாறு கொண்டு தோன்றின' என்றார். கார்க்கடல் - கருமை நிறமான கடல். தூநிறம் - தூய்மையான நிறம். முத்துக்களும், விண்மீன்களும் ஒளியாலும் தோற்றத்தாலும் ஒத்துக் காணப்படுவதால் 'மாறு கொண்டவே' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When one called Āṉiṟakkaṇṇaṉ brought in his palm
  2. a mountain, its forests shattered, and hurled it, from the dark sea
  3. flocks of pure-white pearls flew up with the spray
  4. and vied with the stars that fill the sky.

What the poem says

A monkey chief named Āṉiṟakkaṇṇaṉ, 'Cow-Coloured Eyes', a Tamil rendering of the Sanskrit name Gavākṣa, tears up a mountain, wrecking its forests, and throws it into the sea.

The splash flings pearls from the seabed high into the air along with the spray. Up in the sky they glitter like the stars, and the two seem to compete in brightness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉiṟakkaṇṇaṉ eṉṟu oruvaṉ aṅkaiyāl
kāṉ iṟa malai koṇarntu eṟiya, kārk kaṭal
tū niṟa muttuiṉam tuvalaiyōṭum pōy
vāṉ niṟai mīṉoṭu māṟu koṇṭavē