கம்பராமாயணம் 6730 · யுத்த 7.13

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிந்துரத் தட வரை எறிய சேணிடை
முந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால்
அந்தரத்து எழு முகில் ஆடையா அகன்
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே.

பொருள் · Meaning in Tamil

சிந்துரத் தடவரை எறிய- யானைகளை உடைய பெரிய மலைகளை வானர வீரர்கள் கடலில் எறிவதால்; சேணிடை முந்துற - நீண்ட தொலையுள்ள வானத்திலே முன்பே; தெறித்து எழு முத்தம் தொத்தலால் - தெறித் தெழுந்த முத்துக்கள் தம்மீது தொத்திக் கொள்வதால்; அந்தரத்து எழு முகில் ஆடையா - ஆகாயத்திலே எழுந்த மேகங்களே ஆடையாக, நெடும்பருதி வானம் - பெரிய சூரியனை உடைய வானம்; அகன் பந்தர் ஒத்தது - அகன்ற பந்தலைப் போலக் காணப்பட்டது.

சிந்துரம் - யானை. வானம் பந்தரையும், முகில் பந்தருக்குக் கட்டும் மேற்கட்டியான விதானத்தையும், மேகத்திலே தொத்திய முத்துக்கள் விதானத்தில் தொங்க விடும் முத்துச் சரத்தையும் போன்று காணப்பட்டன. நீலப்பட்டாடைக்கு மேலே ஒளி விடும் விளக்கை ஒத்துச் சூரியன் விளங்கினான் என்பதை 'நெடும் பருதி வானம்' என்பது குறிக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As great elephant-haunted mountains were hurled, the pearls
  2. that splashed up first into the far heights clung there,
  3. so that, with the clouds rising in the air for its cloth, the wide
  4. sky with its great sun looked like a broad pavilion.

What the poem says

Again the pearls thrown up by the falling mountains are the subject. They catch on the clouds high above.

The sky becomes a festival pavilion: the clouds are its cloth canopy, the pearls hanging from them are the strings of pearls that decorate such a canopy, and the sun shines like a lamp above the blue silk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cinturat taṭa varai eṟiya cēṇiṭai
muntuṟat teṟittu eḻu muttam tottalāl
antarattu eḻu mukil āṭaiyā akaṉ
pantar ottatu neṭum paruti vāṉamē.