கம்பராமாயணம் 6731 · யுத்த 7.14

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீச- வானர வீரர்கள் மூங்கில் வளர்ந்துள்ள பெரிய மலைகளைக் கடலின் மீது எறிதலால்; மீமிசை சேண் உறுதிவலையால் - மேலே எழுந்த விண்ணாட்டில் தெறித்த நீர்த் துளிகளால்; நனைந்த செந்துகில்- நனைந்து போன செம்மை நிறப்பட்டாடை; பூண் உறும் அல்குலில் - மேகலாபரணம் பொருந்திய தமது அல்குலிலே; பொருந்திப் போதலால் - சேர்ந்து ஒட்டிக் கொண்டதால்; வான நாட்டுறையும் நங்கை மார் நாணினர்- வான நாட்டிலே வாழும் மகளிர் மிக்க நாணமுற்றனர்.

வேணு - மூங்கில், செந்துகில் - செம்பட்டாடை. தேவமாதர்கள் செம்பட்டாடை அணிவர். மென்மையான பட்டாடை மீது, நீர்த்துளிகள் விழுவதால் அந்த ஆடை உடம்போடு ஒட்டிக் கொள்வது இயல்பு. பெரிய மலைகளை வானர வீரர் வீசுவதால், மிக உயர மாயுள்ள விண்ணுலகத்திலே அத்துளிகள் வீழ, அதனால் செம்பட்டாடை நனைந்து உடம்போடு ஒட்டிக் கொள்ள, உள்ளுறுப்பு வெளியே தெரியலாயிற்றே என, நாணினர் என்க, இது போன்று (கம்ப. 2358) முன்னும் கூறியதை நினைவு கூர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the tall bamboo-clad mountains were flung, the red silk,
  2. soaked by the spray that flew far up on high,
  3. clung to their hips that bore jewelled girdles, and so
  4. the maidens who dwell in the land of the sky were ashamed.

What the poem says

The spray from the falling mountains rises all the way to heaven. There it soaks the thin red silk worn by the celestial women.

The wet silk clings to their bodies and shows their shape, and they are embarrassed. Kampaṉ has used a similar playful image earlier in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṇuviṉ neṭu varai vīca mīmicaic
cēṇ uṟu tivalaiyāl naṉainta cen tukil
pūṇ uṟum alkulil poruntip pōtalāl
nāṇiṉar vāṉa nāṭṭu uṟaiyum naṅkaimār.