கம்பராமாயணம் 6734 · யுத்த 7.17

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அசும்புபாய் தேனும் பூவும் - கசிந்து பாய்கின்ற தேனும் மணமலர்களும்; ஆரமும் அகிலும் மற்றும் - சந்தனம், அகில் போன்ற மற்றும் பலமணப் பொருள்களும்; விசும் பெலாம் உலவும் தெய்வ வேரியின் - ஆகாயமெல்லாம் பரவும் தெய்விக மணம் போல; மிடைந்து விம்ம - எங்கும் நெருங்கி அதிகரிக்க; பசும் புலால் நாறும் வேலை - பசும் புலால் நாற்றம் வீசும் அக்கடல்; தசும்பெலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் என்ன - மணம் ஊட்டப் பெற்று, குடத்திலே நிறைத்து வைத்த தண்ணீர் போல; பரிமளம் கமழ்ந்தது - நல்ல மணம் கமழ்வதாயிற்று.

அசும்பு - கசிதல். ஆரம் - சந்தனம். தசும்பு- குடம். வேரி - மணம். காற்றோடு கலந்து எங்கும் மணம் வீசுவதால் 'விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரி' என்றார்; தெய்வங்களும் விரும்பும் மணம் என்பது கருத்து. விம்மி - மிகுந்து. சார்த்திய - நிறைத்து வைத்த. "தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் மருண்ட தன்மையை மாற்றுவர்" என்று முன்னும் (820) கூறுவது ஒப்பிடத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Oozing honey, flowers, sandalwood, agil and more,
  2. crowding and swelling with a divine fragrance that drifts through all the sky,
  3. like water stored in jars, all of them steeped with scent,
  4. the sea that reeks of raw flesh breathed out perfume.

What the poem says

The mountains carry their riches into the sea: dripping honey, blossoms, sandalwood and fragrant agil wood. Their scent spreads until it fills the sky, a perfume fit for the gods.

The ocean, which normally smells of raw fish, now smells like water kept in jars and scented for drinking. The image echoes an idea stated earlier in the epic: when the wise mingle with lesser people, they change them for the better.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1acumpu pāy tēṉum, pūvum, āramum akilum, maṟṟum,
vicumpu elām ulavum teyva vēriyiṉ miṭaintu vimma,
tacumpu elām vācam ūṭṭic cārttiya taṇṇīr eṉṉa,
pacum pulāl nāṟum vēlai parimaḷam kamaḻntatu aṉṟē.