கம்பராமாயணம் 6737 · யுத்த 7.20

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கறங்கெனத் திரியும் வேகக் கவிக்குலம் - காற்றாடியை ஒத்து வேகமாகச் சுற்றித் திரியும் வானரக் கூட்டம்; கதுவ வாங்கி பிறங்கிருங் கடலில் பெய்த போழ்தத்தும் - மலைகளைப் பற்றிப் பிடுங்கி அந்தப் பெரிய கடலின் மீது எறிந்த போதும்; பெரிய பாந்தள் - மலையிலே வாழ்ந்த பெரிய மலைப் பாம்புகள்; மறம் கிளர் மான யானை வயிற்றினவாக - தாம் ஏற்கனவே விழுங்கிய வலிமைமிக்க பெரிய யானைகள் தமது வயிற்றிலே இருக்க; வாய் சோர்ந்து உறங்கின- வாயைத் திறந்தபடி உறங்கிக் கொண்டு கிடந்தன; உணர்விலாதார் கேடுற்றாலும் உணர்வரோ - அறிவில்லாதவர்கள், தமக்குக் கேடு நேர்ந்தாலும் உணர்வரோ? (மாட்டார் என்பது கருத்து)

கறங்கு - காற்றாடி, வேகக் கவிக்குலம் - விரைந்து செல்லும் வானர சேனை. கதுவ வாங்கி - பற்றிப் பிடுங்கி. பாந்தள் - பாம்பு. "கரிய மாமுகில் படலங்கள் கிடந்தவை முழங்கிடக் களிறென்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு பிரிதி எம் பெருமானை" என்ற பெரிய திரு மொழியாலும் (1.2.10) மலைப்பாம்புகள் யானைகளை விழுங்கும் என்பது புலனாகும். யானைகளை விழுங்கிய பாம்புகள் வாய்திறந்தபடி உறங்கி கிடந்தன. அவை வசிக்கும் மலைகளை அப் பாம்புகளோடு வானரங்கள் கடலில் வீசியதைச் சிறிதும் அறியாதனவாயிருந்தன என்பதால், அறிவற்றவர் கேடுநேர்ந்தாலும் உணரமாட்டார்கள் என்பது பெறப்படும். இதுவும் வேற்றுப் பொருள் வைப்பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even when the swift monkey host, whirling about like spinning tops,
  2. seized the hills and plunged them into the vast shining sea, the great pythons,
  3. with fierce and mighty elephants still in their bellies,
  4. slept on with slack jaws: will the senseless sense it even when ruin comes?

What the poem says

Huge pythons live on the mountains, and they have just swallowed whole elephants, as such snakes were believed to do. The monkeys, spinning about like whirligigs, tear up the hills and throw them into the sea with the snakes still on them.

Full and drowsy, the pythons sleep on with their mouths hanging open and never notice what has happened. The poet draws the moral: fools do not notice their own ruin even when it arrives. This is another example of setting a general truth beside a scene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟaṅku eṉat tiriyum vēkak kavik kulam katuva vāṅki,
piṟaṅku iruṅ kaṭalil peyta pōḻtattum periya pāntaḷ,
maṟam kiḷar māṉa yāṉai vayiṟṟiṉa āka, vāy cōrntu
uṟaṅkiṉa kēṭu uṟṟālum uṇarvarō uṇarvu ilātār?