கம்பராமாயணம் 6738 · யுத்த 7.21

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இழை எனத் தகைய மின்னின் எயிற்றின, முழக்கம் எய்த,
புழை உடைத் தடக்கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்தச் சுற்றி
கழை உடைக் குன்றின் முன்றில், உருமொடு கலந்த கால
மழை எனப் பொருத வேலை மகரமும் மத்த மாவும்.

பொருள் · Meaning in Tamil

வேலை மகரமும் மத்தமாவும் - கடலில் வாழும் மகரமீன்களும், மலைகளில் வாழ்ந்த மதம் கொண்ட யானைகளும்; இழை எனத்தகைய மின்னின் எயிற்றின - அணிகலம் என்னத் தகுந்த மின்னலைப் போல ஒளி வீசும் பற்களை உடையனவாய், புழை உடைத்தடக்கை - துவாரத்தை உடைய துதிக்கைகளை; ஒன்றோடு ஒன்று இடை பொருந்தச் சுற்றி - ஒன்றுடன் மற்றொன்று இடையே பொருந்தும்படி சுற்றிக் கொண்டு; கழை உடைக் குன்றின் முன்றில் - மூங்கில்களையுடைய மலைகளின் முன்னே; உருமொடு கலந்த காலமழை எனப் பொருத - இடியோடு கூடிய யுகாந்த காலத்து மேகங்களைப் போலப் போர் புரிந்தன.

இழை- அணிகலம். மின்னின் - மின்னலைப் போல (ஒளியுடைய). மத்தமா - மதம் பொருந்திய யானை. மகரமீன்களுக்கும் தும்பிக்கை உண்டு. ஆதலால் 'புழையுடைத்தடக்கை பொருந்தச் சுற்றி' என்றார். மேகங்கள் இடி முழக்கத்துடன் மழை பொழியும் மகரமும் மத்தமாவும் முழக்கம் செய்து போரிட்டன என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With tusks like lightning, fit to be called ornaments, roaring,
  2. their great hollow trunks wound around one another,
  3. before the bamboo-clad hills, like the clouds of the world's end
  4. mingled with thunder, the sea's makaras and the rutting elephants fought.

What the poem says

Before the bamboo-covered hills, now standing in the sea, the makaras of the ocean meet the rutting elephants carried in with the mountains, and the two fight.

Makaras were imagined with trunks like elephants, so the two kinds of beast wrap their trunks around each other. Their tusks flash like lightning and their roaring is like thunder, so the fight looks like the storm clouds at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻai eṉat takaiya miṉṉiṉ eyiṟṟiṉa, muḻakkam ēynta,
puḻaiyuṭait taṭak kai oṉṟōṭu oṉṟu iṭai poruntac cuṟṟi
kaḻaiyuṭaik kuṉṟiṉ muṉṟil, urumoṭu kalanta kāla
maḻai eṉap poruta vēlai makaramum matta māvum.