கம்பராமாயணம் 6739 · யுத்த 7.22

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன்றின, சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல,
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தனர், நெருப்புக் கோப்ப
ஒன்றின் மேல் ஒன்று வீழ, உகைத்து எழுந்து, உம்பர் நாட்டுச்
சென்று, மேல் நிலை பெறாது, திரிந்தன சிகரச் சில்லி.

பொருள் · Meaning in Tamil

குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன - வானர வீரர்கள் கொண்டு வந்து குவித்த மலைகள்; ஒன்றின் மேல் ஒன்று வீழ - ஒன்றின் மேல் ஒன்று வீழ்வதால்; நெருப்புக் கோப்ப - இடையிலே நெருப்பு உண்டாக; சிகரச் சில்லி- மலைச் சிகரங்களின் சிறுதுண்டுகள்; உகைத்து எழுந்து உம்பர் நாட்டுச் சென்று - வேகத்தோடு எழுந்து விண்ணுலகுக்குச் சென்று; மேல் நிலை பெறாது - மேலே நிலைத்து நிற்க இயலாமல்; பொன்றின சிறிய புண்ணியம் புரிந்தோர் போல - இறந்து போய்விட்ட சிறிதளவு புண்ணியம் செய்தவர்கள் தாம் செய்த புண்ணியத்திற்கேற்ப விண்ணுலகம் சேர்ந்து புண்ணியப்பயன் தீர்ந்து மீண்டும் மண்ணுலகு வருவது போல; திரிந்தன - கீழே வந்து வீழ்ந்தன.

கோப்ப - உண்டாக (பிறக்க). சிகரச் சில்லி - மலைச் சிகரத்தின் சிறிய துண்டுகள். உகைத்து - விரைந்து. உவமையணி. உம்பர் நாடு - தேவருலகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like those who die having done only a little merit,
  2. as the hills the monkey heroes piled up struck fire
  3. falling one upon another, the chips of their peaks shot up,
  4. reached the land of the gods, found no place there, and fell back.

What the poem says

When the stacked mountains crash on one another and strike fire, small fragments of their peaks fly up as far as heaven, but cannot stay there and drop back down.

The simile is the fate of people with only a little merit. After death they reach heaven, but when their small store of merit is used up they must fall back to earth to be born again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉṟiṉa, ciṟiya āya puṇṇiyam purintōr pōla,
kuṉṟukaḷ kurakku vīrar kuvittaṉa neruppuk kōppa
oṉṟiṉ mēl oṉṟu vīḻa, ukaittu eḻuntu, umpar nāṭṭuc
ceṉṟu, mēl nilai peṟātu, tirintaṉa cikarac cilli.