கம்பராமாயணம் 6740 · யுத்த 7.23

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூர் உடை எயிற்றுக் கோள் மாச் சுறவு இனம் எறிந்து கொல்ல,
போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் போத்தும்,
நீர் இடைத் தோற்ற அன்றே? தம் நிலை நீங்கிற்று என்றால்
ஆர் இடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின் அம்மா?

பொருள் · Meaning in Tamil

கூருடை எயிற்றுக் கோள்மாச் சுறவினம் - கூர்மையான பற்களை உடைய எவரையும் கொல்லவல்ல பெரிய சுறாமீன்கள்; எறிந்து கொல்ல - வெட்டிக் கொல்வதால்; போருடை அரியும் -போர் செய்ய வல்ல சிங்கங்களும்; வெய்ய புலிகளும் - கொடுமை மிக்க புலிகளும்; யாளிப் போத்தும் - ஆண் யாளிகளும்; நீரிடைத் தோற்ற (அன்றே) - தண்ணீரிலே தோற்று இறந்தன; அறிவிடை நோக்கின் - அறிவால் ஆராய்ந்து பார்த்தால்; தம் நிலை நீங்கிச் சென்றால் - தாம் நிலைத்து வாழுமிடத்தை நீங்கிச் செல்வாராயின்; மேலோர் ஆரிடைத் தோலார்- வல்லமை மிக்கவர்களும் எவரிடம் தோல்வி அடையமாட்டார்கள்; தோல்வியுறவே செய்வர்.

கூர் உடை எயிறு - கூர்மையானபற்கள். கோள்மா- உயிர்களைக் கொன்று கொள்ள வல்ல விலங்கு. சுறவு இனம் - சுறாமீன்களின் கூட்டம். தோலார்- தோல்வியடையார். அன்றே, அம்மா என்பன அசைச் சொற்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As shoals of sharp-toothed, killing sharks struck and slew them,
  2. the battle-hardened lions, the fierce tigers and the male yāḷis
  3. were defeated in the water, were they not? When they leave their own ground,
  4. to whom will even the great not lose, if you look at it wisely?

What the poem says

Lions, tigers and yāḷis, mythical lion-like beasts, are carried into the sea with their mountains. Mighty as they are on land, in the water they are torn apart by sharks.

The moral: anyone, however strong, who leaves their own proper ground can be beaten by anyone at all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūruṭai eyiṟṟuk kōḷ māc cuṟavuiṉam eṟintu kolla,
pōruṭai ariyum, veyya pulikaḷum, yāḷip pōttum,
nīriṭait tōṟṟa aṉṟē? tam nilai nīṅkic ceṉṟāl
āriṭait tōlār mēlōr, aṟiviṭai nōkkiṉ ammā?