கம்பராமாயணம் 674 · பால 10.122

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கொடுத்து அருள் வெறுக்கை வேண்டிற்று, ஒற்கம் ஆம் விழுமம் குன்ற
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு' என்று அவன் தொழுது, வேந்தன்
தடுப்பு அரும் தேரின் ஏறித் தடை இலர் படர்தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான்.

பொருள் · Meaning in Tamil

எனை எடுத்து வளர்த்த - என்னை எடுத்து வளர்த்த, தாதைக்கு - தந்தைக்கு (ரிசிகனுக்கு); ஒற்கம்ஆம் விழுமம் குன்ற - வறுமைத் துன்பம் கெடும்படி; வேண்டிற்று வெறுக்கை - (அவன்) விரும்பும் செல்வத்தை; கொடுத்து அருள் - (எனக்கு விலையாகக்) கொடுத்தருள்க; என்று - என்று (அரசனை நோக்கிக்) கூறி; அவன் தொழுது - தந்தையை வணங்கி; வேந்தன் தடுப்பரும் - அரசனது தடுக்க இயலாத; தேரின் ஏறி - இரதத்தின் மேல் ஏறிக் கொண்டு; தடை இலாப் படர்தலோடும் - ஒரு தடையும் இல்லாமல் இருவரும் செல்லுகையில்; சுடர்க் கதிர்க் கடவுள் - ஒளிவிடும் கதிர்களையுடைய சூரியன்; வானத்து உச்சி - வானத்தின் நடுப்பகுதியாகிய, அம் சூழல் புக்கான் - இடத்தை அடைந்தான்.

ஒற்கம்: வறுமையால் உண்டான தளர்ச்சி. தன்னை இதுவரை பேணி வளர்த்த உதவிக்குக் கைம்மாறாகத் தன்னை விற்றுச் செல்வம் பெறுமாறு வேண்டினான். தேரின் ஏறி: தேரின் ஏற. செயவென் எச்சம் செய்தெனத் திரிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Graciously give the wealth he wants, so that the misery of want may leave
  2. the father who raised me,' he said, and bowed to him; and as he climbed into the king's
  3. unstoppable chariot and they went on without hindrance,
  4. the god of bright rays entered the lovely region at the summit of the sky.

What the poem says

Cuṉaccēpaṉ asks the king to pay his father whatever wealth he desires, so that the family's poverty may end; this will be his return for having been raised. He bows to his father and gets into the king's chariot, and they travel on until the sun stands at the zenith — noon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṭuttaruḷ veṟukkai vēṇṭiṟṟu, oṟkam ām viḻumam kuṉṟa
eṭuttu eṉai vaḷartta tātaikku' eṉṟu avaṉ toḻutu, vēntaṉ
taṭuppu arun tēriṉ ēṟit taṭai ilāp paṭartalōṭum,
cuṭark katirk kaṭavuḷ vāṉattu ucci am cūḻal pukkāṉ.