கம்பராமாயணம் 675 · பால 10.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அப்பொழுது) வேந்தன் - அம்பரீடன்; அவ்வயின் - (கோசிகன் தவம் புரியும்) அந்த இடத்தில்; இழிந்து - தேரிலிருந்து இறங்க; அருங் கடன் முறையின் - அரிய கடைக்காலக் கடமைகளை முறைப்படி; ஆற்ற - செய்வதற்காக; செவ்விய குரிசில்தானும் - உத்தமனான சுனச்சேபனும்; நியமம் செய்வான் - நடுப்பகலில் வைதிகக் கடனைச் செய்யும் பொருட்டு; சென்றனன் - (தேரிலிருந்து இறங்கிப்) போனான்; ஆண்டு - (போனவன்) அந்த இடத்திலே; அவ்வியம் அவித்த - பொறாமை முதலிய தீக் குணங்களை நீக்கிய; சிந்தை முனிவனை - தூய மனத்தனான கோசிக முனிவனை; காணா - கண்டு; கவ்வையினோடும் - துன்பத்துடனே; பாத கமலம் அது - திருவடித் தாமரைகளை; உச்சி சேர்த்தான் - தலைமேல் சூடினான்.
கவ்வை: மரண அச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king got down at that place to perform his rare duties in due order;
- the fine young man too went to perform his observance,
- and seeing there the sage whose mind had quenched all envy,
- in his anguish he placed the lotus feet upon his head.
What the poem says
At noon they stop near the place where Kaucikaṉ is doing penance, and both the king and the youth go to perform the midday rites. There Cuṉaccēpaṉ comes upon the sage, whose mind is free of malice, and in his fear of death he falls and places the sage's lotus feet on his head.