கம்பராமாயணம் 6742 · யுத்த 7.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூசு எரி பிறக்க - செறிந்த நெருப்புத் தோன்றுமாறு; மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால் - (வானரங்கள்) தலையின்மேல் தாங்கிக் கொண்டு வந்து கடலில் வீசிய வேகத்தால், கோய் சொரிநறவம் என்ன - கள்முகக்கும் பாத்திரத்திலிருந்து சொரியும் கள்ளைப் போல்; தண் புனல் உகுக்கும் குன்றின் - குளிர்ந்த தண்ணீரைச் சொரியும் மலையினது; வேய் சொரி முத்துக்கு - மூங்கில்கள் சொரிகின்ற முத்துக்களுக்கு; ஈண்ட வாய் சொரி இப்பியோடும் - நெருங்கிய இப்பிமீன்களின் வாயிலிருந்து சொரிந்த முத்துக்களும்; வலம்புரி உமிழ்ந்த முத்தம் - வலம்புரிச் சங்குகள் உமிழ்ந்த முத்துக்களும்; விருந்து செய்திருந்த - விருந்து வைத்தது போல் காணப்பட்டன.
மூசுஎரி - செறிந்த நெருப்பு. மீக்கொண்டு - தலையின் மேல்தாங்கிக் கொண்டு வந்து. முடுக்கம் - வேகம். கோய் - கள்முகக்கும் பாத்திரம். அம்மா - வியப்பிடைச் சொல். குன்றுகள் அருவி நீரைச் சொரிவதற்கு, கள் முகக்கும் பாத்திரத்திலிருந்து ஒழுகும் கள் உவமையாகும். வானரங்கள் மலைகளைத் தலையில் தூக்கி வந்து தீப் பிறக்கும்படி கடலில் போட்ட வேகத்தினால் மலைகளில் இருந்து அருவி நீர் பெருகியது என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the force with which they were carried overhead and set down, so that dense fire sprang up,
- the hills poured out cool water like toddy pouring from a ladle,
- and to the pearls shed by their bamboos, ah, a feast was given
- by the pearls spilled from the mouths of crowding oysters and spat out by right-whorled conches.
What the poem says
The monkeys carry the mountains on their heads and slam them down so hard that fire flares up. The shock makes the hills' streams gush out like toddy spilling from a ladle.
Bamboos were believed to produce pearls, so the mountains bring their own pearls into the sea. The ocean's oysters and rare right-spiralling conches pour out their pearls in welcome, as if hosts were feasting newly arrived guests.