கம்பராமாயணம் 6744 · யுத்த 7.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெய்ய சீயமும் யாளியும் - கொடிய சிங்கங்களும் யாளிகளும்; வேங்கையும் - வேங்கைகளும் ஆகியவற்றுடன்; மொய்கொள் குன்றின் முதலின - நெருங்கிய மலைகளில் உள்ள மலைபடு பொருள்கள் முதலியன; மொய்த்தலால் - செறிந்திருத்தலால்; நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்தது - நெய்தல் நிலம் குறிஞ்சியை ஒத்துக் காணப்பட்டது; அய்யன் வேண்டின் அது இது ஆமன்றே - எல்லோருக்கும் தலைவனாகிய இறைவனே விரும்பினால் ஒன்று மற்றொன்று ஆகுமல்லவா?
வானர வீரர்கள் மலைகளைக் கொண்டு வந்து கடலில் போடுவதால் மலையில் வாழும் சிங்கம், யாளி, வேங்கை முதலியனவும், மற்றுமுள்ள மலைபடு பொருள்களும் கடலில் நிறைந்திருத்தலால், கடல் நிலம் மலை நிலம் போலக் காணப்பட்டது. நெய்தல் கடலும் கடல் சார்ந்த நிலமும் குறிஞ்சி மலையும் மலைசார்ந்த நிலமுமாம். எனவே, 'நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்தது' என்றார். 'மொய் கொள் குன்றின் முதலின' என்றது மலைநிலத்திலுள்ள மற்றைய மலை படு பொருள்களையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If the Lord wills it, that becomes this, does it not?
- Because fierce lions, yāḷis and tigers
- and all the other things of the crowded hills thronged there,
- the sea-girt coast came to resemble the mountain country.
What the poem says
Classical Tamil poetry divides the world into landscapes. Neytal is the seashore and kuṟiñci the mountains. Now that the hills, with their lions, yāḷis, tigers and all their other produce, fill the sea, the seashore looks like mountain country.
The poet sees in this the power of the Lord, Irāmaṉ: when he wills it, one thing simply turns into another.