கம்பராமாயணம் 6745 · யுத்த 7.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யான் உணாதன இங்கு இவை- (வானர வீரர்கள் மலைகளைக் கடலில் எறிவதால் அம் மலையின் வாழ்ந்த மான்கள் உணவு தேடி அலைந்து எங்கும் மீன்களே இருப்பதால்) யான் உண்ணத்தகாதன இவை; என்னவே தீன் உணாதன - என்று விலக்கி எதையும் தின்னாதன வாயின; என் இது செய்யும் - (மலையிலிருந்து வந்த விலங்குகள்) வேறு என்ன செய்யும்; மான் உணாத திரைக் கடல்- கடலில் வீழ்ந்த விலங்குகள் உண்ணத்தகாதன வான; மீன் உணாத விலங்கு இல்லை - மீன்கள் தின்னாத விலங்குகளே எதுவுமில்லை.
தீன் - தீனி. 'என் இது செய்யுமே' கடலில் உள்ள மீன்களைத் தின்னாத மலை விலங்குகள் எதைத் தின்று எப்படி உயிர் வாழப் போகின்றன என்ற இரக்கம் தோன்ற உரைத்தார். 'மான்' இங்கே பொதுவாக விலங்குகளைக் குறித்தது. கடலில் உள்ள மீன்களைத் தின்ன இயலாதிருக்க அம்மீன்களோ மலையிலிருந்து வீழ்ந்த எல்லா விலங்குகளையும் தின்றன என்க. 'யான் உணாதன இங்கு இவை' எனக் கூறி மீன்களை விலக்கிய விலங்குகள் எதையுமே தின்னாதனவாக இருந்தன; அவை வேறு என்னதான் செய்யப் போகின்றன என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying 'These here are things I do not eat',
- they ate no food; what could they do?
- Yet of the beasts that the wave-tossed sea, which the deer would not eat from, now held,
- there was none the fish did not eat.
What the poem says
A small, wry scene. The deer and other plant-eating animals that fell into the sea with their hills find nothing around them but fish. They refuse it as food they cannot eat, and so they eat nothing at all. The poet pities them: what else could they do?
The fish have no such scruples. They eat every one of the animals that has fallen in.