கம்பராமாயணம் 6750 · யுத்த 7.33

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பளிக்கு மால் வரை முந்து படுத்தன
ஒளிக்கும் ஆழி கிடந்து என ஓர்கிலர்
'வெளிக்கு மால் வரை வேண்டும்'எனக் கொணர்ந்து
அளிக்கும் வானர வீரர் அநேகரால்.

பொருள் · Meaning in Tamil

பளிக்குமால் வரை - பெரிய பளிங்கினாலமைந்த மலைகள்; முந்து படுத்தன - முன்பு வானரங்களால் கடலில் வீசப்பட்டவை; ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார் - கடலுக்குள் கிடப்பதை அறியாதவராய்; வெளிக்கு மால் வரை வேண்டும் - இந்த இடைவெளிக்கு ஒரு பெரிய மலை தேவை; எனக் கொணர்ந்து அளிக்கும் - என்று கூறிப்பெரிய மலைகளைக் கொண்டு வந்து தருகின்ற; வானர வீரர் அநேகரால் - வானரவீரர் அநேகம் பேராவார்.

பளிங்கு மலை நீரைத் தடுத்திருந்ததை அறியாத வானரங்களை 'ஓர்கிலார்' என்றார். ஒளிக்கும் ஆழி - ஒளிக்கப்பட வேண்டிய கடல். ஓர்தல் - உணர்தல். வெளி - இடைவெளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great crystal mountains laid down earlier
  2. lay hidden in the sea, and not perceiving them,
  3. saying 'This gap needs a big mountain', many monkey heroes
  4. kept bringing mountains and handing them over.

What the poem says

A gentle joke. Some of the mountains thrown in earlier were made of clear crystal, and lying under the water they cannot be seen.

Many monkeys, thinking there is still an open gap, keep hauling in more mountains to fill a space that is in fact already closed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷikku māl varai muntu paṭuttaṉa
oḷikkum āḻi kiṭantaṉa ōrkilār
'veḷikku māl varai vēṇṭum' eṉak koṇarntu
aḷikkum vāṉara vīrar anēkarāl.