கம்பராமாயணம் 6751 · யுத்த 7.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட - நிலமகளுடைய முதுகும் நெடிதே பாழாகும்படி; மூரிவானரம் வாங்கிய மொய்ம்மலை - வலிமை மிக்க வானரங்கள் எடுத்த நெருங்கிய மலை; வேரின் ஆம் என - வேர்களோ என்று தோன்றும் படி; வெம் முழையின் உழை - கொடிய மலைக்குகைகளிலிருந்து; சோரும் நாகம் நிலனுறத் தூங்குமால் - வெளிப்பட்ட பாம்புகள் நிலத்திலேபடும்படி தொங்கிக் கொண்டிருக்கும்.
'மலையின் வேரின் ஆம்'- மலைக்கும் வேர் இருக்கிறது என்று கூறும்படி. மலைகளை வானரங்கள் தூக்குவதால், குகைகளிலிருந்து வெளிப்பட்ட பாம்புகள் நிலத்தில் படும்படி தொங்கிக் கொண்டிருப்பது மலையின் வேர்களைப் போலிருந்தது. இது தற்குறிப்பேற்ற வணியாகும். முழை - குகை. உழை - இடம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that even the back of the Earth goddess was laid waste far and wide,
- from the massive mountains the mighty monkeys lifted,
- as if they were roots, out of the dreadful caves
- serpents slipped and hung down to touch the ground.
What the poem says
So many mountains are torn up that the Earth's back is left bare and ruined.
As the monkeys lift each hill, snakes slide out of its caves and dangle down to the ground, looking like the mountain's roots. The poet playfully pretends that mountains have roots after all, a figure called taṟkuṟippēṟṟam, poetic fancy.