கம்பராமாயணம் 6752 · யுத்த 7.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருணச் செம்மணிக் குன்று அயலே - செம்மை நிறத்தை உடையதான மாணிக்க மலைகளுக்குப் பக்கத்திலே; சில இருள் நற்குன்றம் அடுக்கின- சில இருள் நிறம் வாய்ந்த நீலமலைகள் அடுக்கப்பட்டுக் கிடப்பன; கருணைக் கொண்டல் - கருணை பொழியும் மேகம் போன்றவனாகிய இராமபிரான்; வறியன் கழுத்து என - தனது மாலையை அடியுறையாக எனக்குக் கொடுத்த இவன் வெறும் கழுத்தினனாயிருக்கிறான் என்று; வருணற்கு ஈந்த வருண சரத்தை ஏய்ந்தன - வருணனுக்கு வழங்கிய பலநிறமணி மாலையை ஒத்துக் காணப்பட்டன.
அருணம் - செந்நிறம். செம்மணி - மாணிக்கம். நல்குன்றம் - நீல மலை. நல்ல பாம்பு. கருநாகம் என்ற ஆட்சி காண்க. தெலுங்கு மொழியில் நல்ல என்ற சொல் கருமை என்ற பொருளில் வழங்கும். வருணன் தனது மணி மாலையைத் தந்து விட்டமையால், வெறும் கழுத்தை உடையவனாக இருக்கிறானென்று பல நிற மணி மாலையை இராமன் வருணனுக்குத் தந்தது போலக் காணப்பட்டது அடுக்கிய மலைகளின் காட்சி. செம்மணி முதலான பல நிற கொண்ட மலையடுக்கு இவ்வாறு வருணிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Beside the hills of ruby, red as dawn, some
- fine dark hills stacked together looked like
- the many-coloured necklace that the cloud of compassion, saying 'His neck is bare',
- gave to Varuṇaṉ.
What the poem says
Ruby-red hills and dark sapphire-blue hills lie stacked side by side in the causeway, making a band of many colours.
When Varuṇaṉ came to submit, he had offered Irāmaṉ his jewelled necklace. Irāmaṉ, a rain cloud of compassion, here seems to return the kindness: noticing that the sea god's neck is now bare, he gives him a necklace of many-coloured gems, the multicoloured line of hills lying across the sea.