கம்பராமாயணம் 6753 · யுத்த 7.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு - தமது உயிருக்குப் பொருந்திய உடம்பை விட்டு விட்ட அவ்வுயிருக்கு; இடம் ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் - பொருந்திய இடமான உடலை ஆய்ந்து மறுபடியும் சென்றடையும் யோகிகளைப் போல; மலைப் பாந்தள் - மலைப் பாம்புகள்; ஆழ்கடல் பாய்ந்து - மலைகளை வானரங்கள் கடலில் வீசியபோது அந்தக் கடலிலே பாய்ந்து; பண்டு உறையும் மலை போந்த - முன்பு தாம் வாழ்ந்த மலையை அடைந்து; மாமலையின் முழை புக்க - அந்த மலைக்குகைகளில் நுழைந்தன.
கூடுவிட்டுக் கூடுபாயும் சித்து வல்ல யோகிகள் தம் உடலை விட்டு நீங்கி வேறு உடலில் வாழ்ந்து, பின் தமது உடலைத் தேடியடைந்து சென்றடைவதை ஒத்து மலைப்பாம்புகளின் செயல் இருந்தது என்பதால் இது உவமையணி. அறிஞர் - யோகிகள். பாந்தள் - பாம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like adepts who search out a place for the life
- that has left its own fitting body, and take it back,
- the mountain pythons leapt into the deep sea, found the hills
- where they had lived before, and entered the caves of those great mountains.
What the poem says
When the mountains are hurled into the sea, the pythons living in them are thrown into the water. They swim about, find their own mountains again, and slip back into their old caves.
The comparison is to yogis with the power of leaving their own body to dwell in another for a while, who then seek out their own body and return to it.