கம்பராமாயணம் 6754 · யுத்த 7.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப - சேதுவின் பெருமைக்கு இணையாகச் சொல்ல; ஓர் ஏது வேண்டும் என்று - ஒரு காரணம் வேண்டும் என்று; எண்ணுவர் என் கொலோ - நினைப்பது எதற்காக?; தூதன் இட்ட மலையின் துவலையால் - இராம தூதனாகிய அனுமன் கடலில் எறிந்த மலையால் எழுந்த நீர்த்திவலைகளோடு; மீன் குலம்- அக்கடலில் வாழுகின்ற மீன் கூட்டங்களும்; மீது விட்டு உலகுற்றது - மேலானதாகிய வீட்டுலகை அடைந்தது.
சேது - அணை. மீதுவிட்டு உலகு - மேலதாகிய வீட்டுலகம். மீன்கள் நீர்த்துளிகளோடு விண்ணுலகடைந்தன என்பதன் நயம் கருதத் தக்கது. 'துவலையால்' ஆல் என்ற மூன்றாவதனுருபு 'ஓடு' என்ற பொருளில் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To speak of something equal to the greatness of the Bridge,
- why think that one needs some argument?
- With the spray from the mountain the Messenger threw in,
- the shoals of fish rose up and reached the world of release.
What the poem says
No proof is needed of the causeway's holiness, the poet says. When Aṉumaṉ, Irāmaṉ's messenger, threw in his mountain, the spray it raised carried the fish up with it, and they reached the highest world, the world of liberation.
The phrase can also mean simply that the fish were flung up into the sky. The poet plays on both senses: merely being touched by the work on Irāmaṉ's bridge brings salvation, even to fish.