கம்பராமாயணம் 6755 · யுத்த 7.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீலன் இட்ட நெடுவரை - அக்கினி தேவனது அம்சமான நீலன் என்ற வானரத் தலைவன் கடலில் இட்ட நீண்ட மலை; நீள் நிலமூலம் முட்டலின் - நீண்ட இந்தப் பூமியின் அடிவரை (பாதாளம்) சென்று முட்டுவதால்; மொய்புனல் கைம்மிக - மிகுந்த தண்ணீர் எல்லைகடந்து செல்வதால்; கூலம் இட்டிய ஆர்கலி - கரை சிறியதாகிய அக்கடல்; ஓலம் இட்டு எழுந்து ஓடி - முழக்கமிட்டுக் கொண்டு மேலெழுந்து ஓடி; உலகு எலாம் கோத்தது - உலகமெல்லாம் சென்று பாய்ந்தது.
நீலன் - வானரத் தலைவன் ஒருவன்; அணை கட்டியவன். நிலமூலம் - நிலத்தின் அடிப்பகுதி (பாதாளம்). முட்டுதல் - தாக்குதல். கைம்மிக - எல்லைகடந்து செல்ல. கூலம் - கரை. இட்டிய - சிறிதான. ஆர்கலி - கடல் (ஒலித்துக் கொண்டே இருப்பது)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the tall mountain Nīlaṉ threw in struck the very root
- of the wide earth, the dense waters overflowed,
- and the ocean, its shores now too small, covered
- all the world, rising and rushing with a roar.
What the poem says
Nīlaṉ, a monkey chief born of the fire god, throws in a mountain so huge that it reaches the foundations of the earth, the underworld.
The water it displaces is too much for the sea's shores. The ocean rises with a roar and floods across the whole world.