கம்பராமாயணம் 6755a · யுத்த 7.38a

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய - வானர வீரன் ஒருவன் ஆயிரம் யோசனை தூரம் உயர்ந்துள்ளதாகிய; அருவி மால்வரை விட்டு எறிந்து ஆர்த்தலால் - அருவிகளையுடைய பெரிய கரியமலையை கடலில் எறிந்து விட்டு, ஆரவாரித்ததால்; மருவுவான் கொடி மாட இலங்கையில் - வானளாவிய கொடிகளை உடைய மாடங்களைக் கொண்ட இலங்கை மாநகரின்; தெருவெலாம் தெண்ணீர் புக்கு உலாய - தெருக்களில் எல்லாம் தெளிந்த கடல்நீர் புகுந்து உலாவியது.

மால் - கரிய (பெரிய எனலுமாம்). இராவணன் ஆணைக்கு அஞ்சிக் கரை கடவாதிருந்த கடல் நகருக்குள் புகுந்து அச்சமின்றித் தெருக்களில் உலாவியது என்பது தோன்ற 'உலாய' என்றது ஓர் நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because one of them hurled a great mountain with waterfalls,
  2. a thousand yojanas high, and roared,
  3. into Ilaṅkai of the mansions whose banners touch the sky,
  4. the clear water entered and wandered through every street.

What the poem says

A single monkey throws in a mountain a thousand yojanas tall, streaming with waterfalls, and shouts in triumph. The surge sends the sea pouring into Ilaṅkai itself, city of towering mansions hung with banners.

The ocean had always kept to its shores out of fear of Irāvaṇaṉ's command. Now it strolls freely through his streets, a sign that his authority is already slipping.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oruvaṉ āyiram yōcaṉai ōṅkiya
aruvi māl varai viṭṭu eṟintu ārttalāl,
maruvu vāṉ koṭi māṭailaṅkaiyil
teru elām pukku ulāya, teṇṇīrarō.