கம்பராமாயணம் 6756 · யுத்த 7.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயிந்தன் இட்ட நெடு வரை- மயிந்தன் என்ற வானரத் தலைவன் கடலில் விட்டெறிந்த பெரிய மலை; வான் உற உயர்ந்து முட்டி விழ - வானத்திலே சென்று உயர்ந்து தாக்கிப் பின் கீழே விழ அதனால்; எழுந்த ஓத நீர்- மேலே பொங்கி எழுந்த கடல்நீர்; தியந்தம் முட்ட - திசைகளின் எல்லையிலே சென்றுதாக்க, திசைநிலையானையும் - எட்டுத் திசைகளிலும் நிலைத்து நிற்கும் திக்கு யானைகளும் கூட; பெயர்ந்து விட்டு அவை யாவும் பிளிறுவ - தாம் வாழும் திசையிலிருந்து இடம் பெயர்ந்து விட்டு, அச்சத்தால் பிளிறின.
தியந்தம்- திக் + அந்தம் (திசையின் எல்லையான இடம்). ஓதநீர்- கடல் நீர். திசை நிலையானை - திக்கு யானை. மயிந்தன் கடலில் எறிந்த பெரிய மலை வானத்திலே மோதிப்பின் கீழே விழுந்தது என்பதை 'வான் உற உயர்ந்து முட்டி விழ' என்றார். திக்குகளில் நிலைத்து நின்ற யானைகளும் இடம் பெயர்ந்து, அஞ்சிப்பிளிறலாயின என்பதை 'பெயர்ந்து விட்டு அவை யாவும் பிளிறுவ' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The tall mountain Mayintaṉ threw rose up till it struck the sky
- and fell, and the sea water surged up
- and struck the ends of the directions, so that the elephants that stand fixed in the quarters
- all shifted from their places and trumpeted.
What the poem says
Mayintaṉ, another monkey chief, hurls a mountain so hard that it flies up, strikes the sky and crashes down.
The wave it raises reaches the very edges of the world. There stand the eight elephants believed to hold up the quarters of the sky. Even these are knocked from their posts and trumpet in fear.