கம்பராமாயணம் 6757 · யுத்த 7.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலக்குவன் சரம் ஆயினும் - இலக்குவனது அம்பு என்றாலும்; ஏன்று எதிர் விலக்கினால் - போரை ஏற்று எதிர்த்து நின்று விலக்கினால்; விலங்காத விலங்கலால் - சிறிதும் விலகாத மலையினால்; அமுதெழ ஆழியைக் கலக்கினான் மகன் - அமுதம் எழும்படி பாற்கடலைக் கலக்கியவனான வாலியின் மகன் அங்கதன்; அலக்கண் எய்த - கடல் துன்பம் எய்தும்படி; மீளக் கலக்கினான் - மீண்டும் கடலைக் கலக்குவானானான்.
'இலக்குவன் சரம்' என்பதற்கு 'இலக்கு வன்சரமாயினும்' என்று பிரித்து குறித்த இலக்கில் சென்று தாக்குவதற்குரிய வலிய அம்பாயினும் என்று பொருள் கூறினும் பொருந்தும். ஏன்று - ஏற்று. விலங்காத விலங்கல் - விலகாத மலையாகும். ஆழியை அமுதெழக்கலக்கினான் வாலி. அவன் மகன் அங்கதன் எதனாலும் விலக்கொணாத மலையைக் கொண்டு, கடல் துன்புறும் படி அக்கடலைக் கலங்கச் செய்தான் என்பது கருத்து. அலக்கண் - துன்பம். ஆழி- கடல். இலக்குவனது அம்பின் வலிமையை முன்னும் பின்னும் (கம்ப. 24/6. 7287) இராமனும் இராவணனும் கூறுவதனாலறியலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a mountain that would not swerve even if an arrow of Ilakkuvaṉ
- met it head-on to turn it aside,
- the son of the one who churned the ocean so that ambrosia rose
- churned it once again, until the sea was in torment.
What the poem says
The son of Vālī, Aṅkataṉ, joins the work. His father Vālī was said to have helped churn the Milk Ocean when the gods drew out the nectar of immortality.
Now the son churns the sea a second time, hurling in a mountain so solid that not even an arrow of Ilakkuvaṉ could knock it off course. The words can also be divided to mean 'even a strong arrow aimed at its target', and both readings fit.