கம்பராமாயணம் 6758 · யுத்த 7.41

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரடிப் பெரும்படை விருத்தன் - கரடிகளின் பெரிய படைக்குத் தலைவனான சாம்பவந்தன் என்னும் முதியோன்; மருத்தின் மைந்தன் - காற்றுத் தேவனாகிய வாயுவின் மகனான அனுமனது; மணி நெடுந்தோள் எனப் பெருத்தகுன்றம் - அழகிய பெரிய தோள்களைப் போன்ற ஒரு பெரிய மலையை, இட்ட விசையினின் - கடலில் எறிந்த வேகத்தினால்; வீசிய திருத்தம் - மேலே தெரித்த தீர்த்தம்; வானவர் சென்னியில் சென்றது - தேவர்களது தலையில் சென்று தெறித்தது.

விருத்தன் - வயதானவன். சாம்பவந்தன் நெடுங்காலம் வாழ்ந்த, நீண்ட ஆயுளை உடையவன். கரடிப் படைக்குத் தலைவன் என்பதால் 'கரடியின் பெரும் படை விருத்தன்' என்றார். அனுமனது தோள்களை வியந்து 'மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோளெனப் பெருத்த குன்றம்' என்றார். மருத்து - காற்றுத்தேவன். விசை - வேகம். சிரத்தில் சென்று தெறித்தமைக்கு ஏற்ப நீர் என்று கூறாது 'திருத்தம்' என்றார். தீர்த்தம் என்பதன் திரிபே திருத்தம். தீர்த்தம் - புனித நீர். எதுகை நோக்கி 'திருத்தம்' எனத் திரிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A mountain as huge as the great jewelled shoulders of the Wind god's son,
  2. thrown by the old leader of the great bear army
  3. with such force that the holy water it flung up
  4. went and fell upon the heads of the gods.

What the poem says

The aged Cāmpaṉ, leader of the bear army, throws in a mountain as massive as the mighty shoulders of Aṉumaṉ, son of the Wind god.

The spray reaches heaven and falls on the gods' heads. Because it lands on their heads like a blessing, the poet calls it tīrttam, sacred water, rather than plain water, a word bent slightly in form to fit the rhyme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruttiṉ maintaṉ maṇi neṭun tōḷ eṉap
perutta kuṉṟam karaṭip perum paṭai
viruttaṉ iṭṭa vicaiyiṉiṉ vīciya
tiruttam vāṉavar ceṉṉiyil ceṉṟatāl.