கம்பராமாயணம் 6759 · யுத்த 7.42

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குமுதன் இட்ட குலவரை- குமுதன் என்னும் வானரத் தலைவன் கடலில் எறிந்த சிறந்த தொருமலை; கூத்தரின் திமிதம் இட்டு - கூத்தாடுபவர்களைப் போலக் குதித்து ஆடி; திரியும் திரைக் கடல்- சுழன்று திரியும் அலைகளையுடைய கடலில்; துமிதம் ஊர்புக - நீர்த்துளிகள் தங்கள் ஊரிலே வந்து விழுவதால்; அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் - (முன்பு பாற்கடலை மந்தர மலையைக் கொண்டு கடைந்ததால் எழுந்த அமுதத்தைப் போல) இன்னும் அமுதம் எழக் கூடும் என்ற ஆசையால்; வானவர் துள்ளினார் - தேவர்கள் மகிழ்ந்து துள்ளலாயினர்.

குமுதன் - வானரத்தலைவருள் ஒருவன். குலவரை - சிறந்த மலை. திமிதம் - திமிதம் என்று ஒலித்துக் கூத்தாடுதல். துமி-துளி. இச் சொல் இப் பொருளில் உலக வழக்கில் வழங்குவதாகக் கூறிய கம்பருக்கு, கலை மகளே ஆய்ச்சி வடிவில் வந்து தயிர் கடைந்து கொண்டிருக்க, பிள்ளைகள் நெருங்கி வர 'துமி தெறிக்கும் தூரப் போங்கள்' என்று கூறியதாக ஒரு கதை வழங்குகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When Kumutaṉ threw in a noble mountain, the wave-tossed sea
  2. wheeled and leapt like dancers beating out their steps,
  3. and as its spray reached their city, the gods jumped for joy
  4. in the hope that ambrosia would rise once more.

What the poem says

Kumutaṉ's mountain sets the sea dancing and leaping. The spray rains down on the city of the gods.

Long ago the gods churned the Milk Ocean with Mount Mantara and won the nectar of immortality. Feeling the spray, they leap with joy, hoping another churning will give them more. A popular tale says that when the poet was challenged over the rare word tumi, 'spray', the goddess of learning appeared as a milkmaid churning curd and used it to warn children away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kumutaṉ iṭṭa kula varai kūttariṉ
timitam iṭṭut tiriyum tiraik kaṭal
tumi tam ūr puka vāṉavar tuḷḷiṉār
amutam iṉṉum eḻum eṉum ācaiyāl.