கம்பராமாயணம் 6760 · யுத்த 7.43

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கன சினத்து உருமின் கடுங் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன்
மன சினத்தன் அனந்தனும் வாழ்வு இகந்து
அன் அசனத் தொழில் மேற்கொள்வது ஆயினான்.

பொருள் · Meaning in Tamil

கனசினத்து உருமின் - மிகுந்த கோபத்துடன் இடியைப் போல் முழங்கி; கடும் கார் வரை- கடிய பெரிய கரிய மலைகளை; பனசன் இட்டன யாவும் - 'பனசன்' என்ற வானரத் தலைவன் கடலில் எறிய அவை அனைத்தையும், பரிக்கிலன் - தாங்க இயலாதவனாய்; மன சினத்து அனந்தனும் - மனத்திலே மிக்க சினத்தை உடையவனான ஆதிசேடனும்; வாழ்வு இகந்து - பாரத்தைச் சுமந்து வாழ்வதை விட்டு (உயிர்துறக்க); அனசனத் தொழில் - உணவு உண்ணாதிருத்தலாகிய தொழிலை; மேற் கொள்வதாயினான் - மேற்கொள்ளலானான்.

பனசன் - வானரத் தலைவன் ஒருவன். பரிக்கிலன் - தாங்க இயலாதவனாய். அனந்தன் - ஆதிசேடன். வாழ்விகந்து - வாழ்வை விட்டு. அன் + அசனம் - அனசனம்- உண்ணாதிருத்தல். அசனம் - உணவு. கோவைப்பகுதியில் கிராமப்புறங்களில் பட்டிப் பொங்கலன்று 'அசனமுண்ணுபட்டியாரே' என்று கூறி மாடுகளுக்கு உணவுண்ணச் செய்தலுண்டு என்பதால் அசனம் - உணவு என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவது புலனாகும். ஆதிசேடன் கோபம் மிக்கவன் என்பதால் 'மன சினத்து அனந்தன்' என்றார்; இலக்குவன் ஒற்ற முற்ற போது "தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்" என்றது (கம்ப. 1717) நினைவு கூரத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to bear all the harsh dark mountains
  2. that Paṉacaṉ hurled, roaring like thunder in great rage,
  3. even Aṉantaṉ, of wrathful mind, gave up on living
  4. and took to the practice of fasting unto death.

What the poem says

Paṉacaṉ, another monkey chief, roars like thunder and throws in mountain after mountain.

Aṉantaṉ, the cosmic serpent Ādiśeṣa who carries the world on his hoods, cannot bear the extra weight. Wrathful though he is by nature, he gives up and starts a fast to the death. The word for this fast, aṉacaṉam, is made from acaṉam, 'food'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉa ciṉattu urumiṉ kaṭuṅ kār varai
paṉacaṉ iṭṭaṉa yāvum parikkilaṉ
maṉa ciṉatta aṉantaṉum vāḻvu ikantu
aṉacaṉattoḻil mēṟkoḷvatu āyiṉāṉ.