கம்பராமாயணம் 6762 · யுத்த 7.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆர ஆயிரம் யோசனை ஆழமும் - கடலில் ஆயிரம் யோசனை ஆழமும்; தீரநீண்டு பரந்த திமிங்கிலம் - முழுதும் நீண்டு பரந்துள்ள திமிங்கிலங்கள்; பார மால் வரை ஏற - பாரமான பெரிய மலை தன் மீது வீழ்தலால்; பதைத்து உடல் பேரவே - பதை பதைத்து உடலைப் பெயர்த்தலால்; குன்றும் வேலையும் - திமிங்கிலங்களின்மீது விழுந்த மலைகளும், கடல்நீரும்; பேர்ந்தவால்- இடம் விட்டுப் பெயர்ந்தனவாயின.
கடலில் ஆயிரம் யோசனை தூரம் நீண்டு பரந்துள்ள திமிங்கிலங்களின் மீது பாரமான மலைகள் வீழ்வதால் பதை பதைத்து உடலைப் பெயர்த்தன. அதனால் மலைகளும், கடல் நீரும் இடம் பெயர்ந்தன என்பது கருத்து. யோசனை - நூறு மைல் என்பர். (பத்துக்காதம் ஒரு யோசனை) பாரமால் வரை - பாரமான பெரிய மலை (பாரம் + மால் + வரை (அசைய)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Whales that stretched long and wide through all
- of the thousand-yojana depth of the sea,
- when the heavy great mountains climbed onto them, writhed and shifted their bodies,
- and so the hills and the sea were moved from their places.
What the poem says
The whales of this ocean are vast, spread through a sea a thousand yojanas deep. A yojana was reckoned at ten kātams, about a hundred miles, though the measure varies.
When the heavy mountains land on their backs, the whales twist in pain and heave their bodies, and their movement shifts both the mountains and the sea itself.