கம்பராமாயணம் 6764 · யுத்த 7.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயிரம் கோடியர் குழுவின் வானரம் - ஆயிரம் கோடி பேராகிய வானரக் கூட்டத்தினர்; தழுவித் தாங்கிய - தமது கைகளால் தழுவித் தாங்கிக் கொண்டு வந்து; தந்த கிரிக்குலம் - தந்த மலைக் கூட்டங்களை; எழுவின் நீள் கரத்து ஏற்றிய - நளன் தனது தூண் போன்ற கைகளில் ஏற்றுக் கொண்ட போது; இற்று இடை வழுவி வீழ்வன - முறிந்து இடையிலே தவறி வீழ்வனவற்றை, கால்களின் வாங்குவான் - கால்களால் தடுத்து நிறுத்தி எடுத்துக் கொள்வான்.
எழு - தூண். வீழ்வன - கீழே விழுகின்ற மலைகளை வானரங்கள் தூக்க முடியாமல் தூக்கின என்பதால் 'தழுவித்தாங்கிய' என்றார். நளனது நீண்ட கைகளை 'எழுவின் நீள் கரம்' என்று சிறப்பித்தார். நழுவிக் கீழே விழும் மலைகளை லாவகமாகக் கால்களால் தடுத்து நிறுத்தி எடுத்த திறத்தை 'கால்களில் வாங்குவான்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the clusters of mountains that the monkey host, a thousand crores strong,
- had hugged and borne and handed over,
- those that broke as he took them on his long pillar-like arms
- and slipped and fell midway, he caught with his feet.
What the poem says
The monkeys, ten thousand million of them, strain to carry the mountains in their arms and hand them to Naḷaṉ.
He takes each on his long arms, as strong as pillars. When one cracks and slips from his grip, he deftly stops it with his feet and picks it up before it falls.