கம்பராமாயணம் 6766 · யுத்த 7.49

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பருத்த மால் வரை ஏந்திய பல்படை
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா
கரத்தின் ஏந்திய கார்வரை கண் அகன்
சிரத்தின் மேற்கொடு நீந்தின சென்றவால்

பொருள் · Meaning in Tamil

பருத்த மால் வரை ஏந்திய - பெரிய கருமை நிறமான மலைகளைக் கரங்களில் ஏந்திய; பல்படை நிரைத்தலின் - பல பேர் கொண்ட வானரப் படைவரிசையாக நிற்பதனால்; சில செல்ல நிலம் பெறா- மலைகளைத் தாங்கி வந்த சில வானரங்கள் செல்லுவதற்கு இடமில்லாததால்; கரத்தின் ஏந்திய கார் வரை - கைகளில் ஏந்திக் கொண்டிருந்த கரிய மலைகளை; கண் அகன் சிரத்தின் மேற்கொண்டு - இடமகன்ற தலையின் மீது சுமந்து கொண்டு; நீந்தின சென்றவால் - நீந்திக் கொண்டு செல்வனவாயின.

நிரைத்தல் - வரிசையாக நிற்றல். நிலம் பெறா- இடம் பெறாமையால். கண் அகன்சிரம் - இடமகன்ற சிரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the many troops bearing huge dark mountains
  2. stood packed in rows, some found no ground to go on;
  3. so, lifting the black hills held in their hands
  4. onto their broad heads, they swam and went on.

What the poem says

The ranks of mountain-carriers are so tightly packed that some monkeys find no path along the causeway.

Not willing to wait, they move the mountains from their hands to their broad heads and swim out through the sea to deliver them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parutta māl varai ēntiya pal paṭai
niraittaliṉ cila cella nilam peṟā
karattiṉ ēntiya kār varai kaṇ akaṉ
cirattiṉ mēṟkoṇṭu nīntiṉa ceṉṟavāl