கம்பராமாயணம் 6767 · யுத்த 7.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரிது சுமந்தன - மலைகளைக் கடுமையாக முயன்று சுமந்து வந்த வானரங்கள்; நீளம் ஆய்ந்து - போக வேண்டிய தூரத்தை ஆராய்ந்து பார்த்து; ஓய்ந்த கால- கால்கள் ஓய்ந்து போனவையாய்; பசியின் உலர்ந்தன - பசியினால் வாடியனவாய்; ஏந்து மால் வரை வைத்து - கைகளில் ஏந்திய பெரிய மலைகளைக் கீழே வைத்து விட்டு; அவற்று ஈண்டு தேன் மாந்திமாந்தி - அம்மலையிலே உள்ளதேனை மிகுதியாக உண்டு; மறந்து துயின்ற - போக வேண்டிய காரியத்தை மறந்து போய் தூங்கலாயின.
உலர்ந்தன- வாடினவாக. அவற்று ஈண்டு தேன் - அவைகளில் நிறைந்துள்ள தேனை. மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏறப் புகுந்த குரங்கு, பக்கத்துப் பாறையில் இருந்த தேனைக் குடித்து உறங்கி விடுவதாக கபிலர் (அகநா.2) காட்டிய காட்சியைக் கம்பர் நினைந்தார் போலும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some that had carried their loads with great toil, measuring the distance still to go,
- with legs worn out and withered by hunger,
- set down the great mountains they bore, and drinking again and again
- the honey gathered on them, forgot everything and fell asleep.
What the poem says
A comic moment. Some monkeys have carried their mountains a long way with great effort. Looking at how far they still have to go, with aching legs and empty stomachs, they put their loads down.
They drink and drink from the honeycombs on the hills, forget their errand, and fall asleep. The scene recalls a well-known picture in the classical poet Kapilar of a monkey that drinks honey from a rock and drops off to sleep.