கம்பராமாயணம் 6769 · யுத்த 7.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கிரி தூக்கின தோய்தலால் - வானர வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்த மலைகள் கடலில் தோய்வதால்; துறைதொறும் - அந்தக் கடலின் எல்லாப் பகுதிகளிலும் (நீர்த்துறைகளிலும்); குறைவில் குங்குமமும் - தன்மையில் குறைவில்லாத குங்குமமும்; குகைத் தேன்களும் - மலைக் குகைகளிலிருந்து விழுந்த தேனும்; நிறை மலர்க் குலமும் - நிறைந்த பலவித மணமலர்களின் கூட்டமும்; எங்கணும் நிறைந்து - எங்கும் நிறைந்து கிடப்பதால்; நாம நீர் - அச்சத்தைச் செய்யும் உவர்க் கடல்; நறை நெடுங்கடல் ஒத்தது - தேன் நிறைந்த நெடிய கடலை ஒத்திருந்தது.
நாமநீர் - அச்சத்தைத் தரும் உவர்க்கடல். கிரிதூக்கின குங்குமமும் தேன்களும் மலர்க்குலமும் தோய்தலால் நாமநீர் நறை நெடுங்கடல் ஒத்தது எனஇயையும். கிரிதூக்கின என்பதற்கு மலைகள் சுமந்துள்ள குங்குமம் முதலியவை எனவும் வானரங்கள் தூக்கிய மலை எனவும் பொருள் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With saffron in full measure, honey from the caves
- and masses of flowers filling every part,
- because the hills they carried were dipped in at every landing,
- the dreadful briny sea became like an ocean of honey.
What the poem says
As the mountains are lowered into the water at every point along the shore, they release their saffron, the honey stored in their caves, and great heaps of flowers.
The frightening salt sea fills with these until it resembles the legendary Sea of Honey, one of the seven oceans of Indian cosmology.