கம்பராமாயணம் 6770 · யுத்த 7.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இடும்பை எத்தனையும் படுத்து எய்தினும் - துன்பங்கள் எத்தனையும் வந்து தடுத்து எய்தினாலும்; (அதனால்) மனம் தளர்ந்து போகாமல்; குடும்பம் தாங்கும் - தமது குடும்பத்தை ஆதரித்துக் காப்பாற்றும்; குடிப் பிறந்தாரின் - உயர்குடியில் பிறந்தவர்களைப் போல; நெடும் பல்மால் வரை- நீண்ட பெரிய பல மலைகள்; தூர்த்து நெருக்கவும் - தூர்த்து நெருக்கிய போதும், துடும்பல் வேலை - அலைகள் பேரொலி எழுப்பும் பெரிய கடல்; துளங்கியது இல்லையால் - சிறிதும் கலங்க வில்லை.
இடும்பை - துன்பம். படுத்து - தடுத்து. தாங்கும் - ஆதரித்துக் காக்கும். இது உவமையணி. குடிப்பிறந்தார் - உவமானம். துடும்பல் வேலை - உவமேயம். இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு (குறள் 1029) எவ்வழி உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பாலவை (நாலடி. 147) என்ற கருத்துகள் இங்கு இணைத்து உணரத் தக்கன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though many tall great mountains filled it in and pressed upon it,
- the roaring sea did not waver at all,
- like those of noble birth who, whatever troubles
- come upon them, go on supporting their families.
What the poem says
Despite all the mountains pressing in, the roaring sea is not shaken.
It is compared to people of good family who carry the burden of their household however many hardships fall on them. The thought matches well-known lines in the Tirukkuṟaḷ and the Nālaṭiyār, which praise those who hold up their families through every trouble and do what is right however badly they suffer.