கம்பராமாயணம் 6772 · யுத்த 7.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பழுமரம் பறிக்க - வானர வீரர்கள் அணை கட்ட ஆல் மரங்களை வேரொடு பறித்து விடுவதால்; பறவைக்குலம் - அந்த மரங்களை வாழுமிடமாக உடைய பறவைக்கூட்டம்; தழுவி நின்று ஒருவன் - ஒருவனாகவே கிளைகளைத் தழுவியிருந்து; தனித் தாங்குவான் விழுதலும்- தனியாகத் தாங்கி ஆதரிப்பவன் இறந்துபட, புகல் வேற்றிடம் இன்மையால் - வேறு புகலிடம் இல்லாமையால்; அழுது அரற்றும்கிளை என ஆன - அழுது புலம்பும் கிளைஞரைப் போலாயின.
பழுமரம் - ஆலமரம். உவமையணி. அழுது அரற்றும்கிளை - உவமானம். பறவைக்குலம் - உவமேயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the banyan trees were uprooted, the flocks of birds
- were like a household that, when the one man who embraced them
- and supported them alone has fallen, having no other refuge,
- weeps and wails.
What the poem says
The monkeys tear up great banyan trees for the bridge. The birds that lived in them cry out in distress.
They are like a family whose only breadwinner, the one man who held them all together, has died, leaving them nowhere else to turn. The word kiḷai means both 'branch' and 'kinsfolk', which sharpens the comparison.