கம்பராமாயணம் 6774 · யுத்த 7.57

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தொக்கு அடங்கல ஓடும் துவலைகள் - பலவாகச் சேர்ந்து அடங்காதனவாக ஓடும்நீர்த்துவலைகளோடு; மிக்கு அடங்கலும் போவனமீன்குலம் - முழுவதும் போவனவாகிய மீன்கூட்டங்கள்; அக்கருங்கடல் தூர- அவை வாழ்ந்துவந்த அந்தக் கடல் தூர்ந்து போக; அயற்கடல்புக்கு - தாம் வாழ்வதற்குரிய வேறு ஒரு கடலில் புகுந்து; அடங்கிடப் போவன போன்ற - அடங்குவதற்காகப் போவன போலக் காணப்பட்டன.

தொக்கு - பலவாகச் சேர்ந்து. திவலைகள் பலவாகச் சேர்ந்து அடங்காதனவாக விரைந்து ஓடுவதை 'தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்' என்றார். மிகுதியாக உள்ள மீன் அத்தனையும் அத்திவலைகளோடு மேலே சென்றனவாதலின் 'மிக்கு அடங்கலும் போவன மீன்குலம்' என்றார். அயற்கடல்- வேறுகடல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the spray that rushed up in masses, beyond control,
  2. all the shoals of fish went off in their multitudes,
  3. as if, that dark sea being filled in, they were going
  4. to enter another ocean and settle there.

What the poem says

Masses of spray shoot up uncontrollably, and whole shoals of fish are carried up with it.

The poet imagines them as refugees. Their dark sea is being filled in with mountains, so they are leaving to find another ocean to live in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tokku aṭaṅkala ōṭum tuvalaikaḷ
mikku aṭaṅkalum pōvaṉa mīṉ kulam
ak karuṅ kaṭal tūra ayaṟ kaṭal
pukku aṭaṅkiṭap pōvaṉa pōṉṟavē.